இக்கோயிலில் நரசிம்மர் ‘உத்யோக நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார்.
அஹோபில மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது. வேலை வாய்ப்பு வரம் தருவதில் இவர் நிகரற்றவர். எனவே நரசிம்மமூர்த்தியின் திருப்பெயரே உத்யோக நரசிம்மர் என்றாயிற்று.
வேலைகளில் இருப்பவர்கள் தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க இக்கோயிலில் இருக்கும் நரசிம்மரை வணங்கலாம்.
இத்தலம் கும்பகோணத்திலிருந்து திருவைகாவூர் செல்லும் சாலையில் சுவாமி மலையிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும், ஆதனூரிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிலும் உள்ளது ஊர் பெயர் புள்ளம்பூதங்குடி.
ப.சரவணன்.