Breaking News:
tamilnadu epaper

உலக மரபு வார சிறப்புச் செய்தி

உலக மரபு வார சிறப்புச் செய்தி

தமிழர்களின் கலை இசை பண்பாட்டின் மரபுகளின் பொக்கிஷமாக திகழ்வது நம் *திருமெய்யம்!*


இங்கு பிறந்தோம்.. என்பதே நம் திருமயத்தாரின் தனிச்சிறப்பு!

வரலாற்று சிறப்புமிக்கத் தொல்லியல் பெருமையில் மணிமகுடங்களாய்.. நமது ஊர் திருக்கோவில்கள்.. மலைக்கோட்டை.. சான்றாகத் திகழ்கின்றது!


பல்லவர்கள் கால *குடைவரை மரபு* நமதுஊர் பெருமாள் சிவனாலயங்கள் சாட்சி!

சிவகெங்கைச்சீமையின் சித்திரக்கோட்டை.. இசைக்கல்வெட்டு.. அகழிக்கரையின் அற்புதக்காட்சி.. மரபுக்கு ஓர் சாட்சி!

கலைவாசலாகத் திகழும் கோட்டைவாசல்! மதிற்சுவர்கள்.. காவல் தெய்வங்கள்.. பைரவர் தரிசனம்.. என சொல்லிக்கொண்டே போகலாம்! 

வீரம்மிகு சுதந்திரப்போரின் பிதாமகன் தீரர் சத்தியமூர்த்தி அவர்கள் பிறந்த ஊர் நமது திருமெய்யமே! திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம் பெற்ற பக்திப்பெருஊர் நம் திருமெய்யமே.. சத்திய கிரீஸ்வரர்.. சத்திய மூர்த்தி.. சத்திய புஷ்கரணி என் சத்தியமயமாகத் திகழும் மரபு சார்ந்த திருமயத்தை மரபு மாறாமல் காப்பதற்கு இந்த நாளில் சபதம் ஏற்போம்!


மதில்களைச் சிதைக்காமல்.. குடிகாரர்களின் கோட்டையாக மாற்றாமல்.. ஒற்றுமையாக உறுதியாக மரபுவழிவந்த நமது திருமெய்யத்தின் மரபினை மாண்பினை காக்க இன்று உறுதியேற்போம்!



திருமயம் புலவர் மகன்

-வே.கல்யாணகுமார்.எம்.ஏ.,