வணக்கம். பிறப்பால் எனது சொந்த ஊர் சிவகளை. எனது சமூகம் 18 கிராமங்களில் பரவி வசித்து வருகிறார்கள். அனைவர்க்கும் தாய்க்கிராமம் சிவகளை. தற்போது காலமாற்றத்தால் பல்வேறு நகரங்களிலும் வசித்து வருகிறோம். நான் திருநெல்வேலியில் வசிக்கிறேன்.
எங்கள் எல்லோர்க்கும் பொதுவான குலதெய்வம்
அருள்மிகு சேரந்தைய சாஸ்தாஆவார்.அய்யப்பனின் வடிவமே இவர்.
அவ்வப்போது சனிக்கிழமை தோறும் சென்று வழிபடுபவர்கள் வழிபட்டாலும் ஆண்டுக் கொரு முறை பங்குனி உத்திரம் அன்று எந்த ஊரில் இருந்தாலும் தவறாது அனைவரும் கூடி வழிபாடு செய்வது வழக்கம். நற்குடி வேளாளர் சமூகத்திற்கென பாத்தியப் பட்டதாக இருப்பினும் பிற இனத்தவர்களும் வந்து வழிபடுகிறார்கள்.
பொங்கல் இட்டு வழிபடுவதோடு ஒன்றிரண்டு பேர் ஆடு வெட்டி பலியிட்டும் வழிபடிகிறார்கள்.
வேண்டியதை வேண்டியவாறு அருளும் தெய்வம் இவர்.
வேண்டுதல் நிறைவேறியதற்காக கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில்செங்கல் மணலால் குதிரை கட்டி நேர்த்திக் கடன் செய்யும் வழக்கம் இருந்து வந்ததற்கு அடையாளமாக 3 குதிரைகள் உருவம் உள்ளன. அதில் ஒன்று சற்று பெரிய வடிவத்தில் உள்ள குதிரை ஒன்று எனது சின்ன தாத்தா சங்கரன் பிள்ளை என்பவர் தனக்கு ஆண் குழந்தை வேண்டி வேண்டுதலுக் கிணங்க ஆண் குழந்தை பிறந்ததற்காக நேர்த்திக் கடனாக கட்டிக் கொடுத்ததென எனது பெற்றோர் கூறக் கேள்விப் பட்டிருக்கிறேன் .
எங்கள் சமுதாயத்தில்
சேரந்தையன் என்ற பெயர் பலருக்கும் இருப்பதில் இருந்தே இத் தெய்வத்தின் மீதுள்ள பற்று புலப்படும். சிலர் பெண்குழந்தைகளுக்குக் கூட சேரந்தையம்மா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
சே. முத்துவிநாயகம் பிகாம், எம்ஏ.
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் ( கணக்குகள் ) பணிநிறைவு.
நன்றி வணக்கம்.