tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் உறையூர் வெக்காளியம்மன் கோவில்

எங்கள் குலதெய்வம் உறையூர் வெக்காளியம்மன் கோவில்

திருச்சியில் மிகப் பிரபலமான இடம் உறையூர் அதில் அமைந்துள்ள வெக்காளியம்மன் கோயில் முற்கால சோர்களின் தலைநகரமாக விளங்கிய இந்த நகரத்தில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அம்மன் வரம் தந்து அருள் பாவித்து கொண்டிருக்கிறார்

 

முற்கால சோழர்களின் தலைநகரமாக மிகப் பிரபலமான உறையூர் விளங்கியது. இது கி.பி.230-ல் தாலமி என்ற யவன ஆசிரியரும் கி.பி.240-ல் பெரிப்ளஸ் என்ற கிரேக்க நாட்டு புவியியல் நூலும் இந்த ஊரை ஓர்த்துரா என்று குறிப்பிடுகிறது வடமொழி நூல்கள் உறையுரை உரகபுரம் என்று குறிப்பிடுகின்றனர் . மேலும் இந்த ஊர் உறந்தை கோழி வாரணம் முக்தீஸ்வரம் வாசபுரி என்று பலவேறு பெயர்களிலும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

 

பொதுவாக ஊர்களை அமைக்கும் போது அந்த ஊர் காவல் தெய்வங்களை ஊர்களின் எல்லையில் கோவில்களாக எழுப்பி வணங்குவர். வீரமும் வெற்றியை அளிக்கும் தெய்வங்களை வடக்கு நோக்கி அமைப்பார்கள் அதன்படி ஊர் எல்லையிலும் வடக்கு நோக்கி அமைந்துள்ளது உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில்.

 

இந்த பிரபலமான உறையூர் வெக்காளியம்மன் கோவில் வருவதற்கு வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.

 

உறையூரில் பன் பராந்தகன் என்ற அரசன் தன் மனைவி புவன மாதேவியுடன் நல்ல ஆட்சி செய்து வந்த காலத்தில் சாரமாமுனிவர் என்பவர் நந்தவனம் அமைத்து பல வகையான மலர் செடிகளையும் பயிரிட்டு அதில் வரும் மலர்களை பறித்து தாயுமானவர் சாமிக்கு அணிவித்து அழகு பார்த்துக் கொண்டிருந்தார்.

 

இப்படிப்பட்ட நிலையில் பிராந்தகன் என்ற மலர் வியாபாரி அசரிடம் நல்ல பெயர் பெற வேண்டும் என்று எண்ணி நந்தவனத்து மலர்களைப் பறித்து அரசருக்கு கொடுக்கத் தொடங்கினான். அரசரும் நல்ல தரமான மலர்களைக் கண்டு உள்ள மகிழ்ந்து தாயுமானவர்க்கு மட்டுமே அணிவிப்பதற்காக சாரமா முனிவர் அமைத்த அந்த நந்தவனத்து மலர்கள் என்று தெரிந்தும் கூட தன்னுடைய தப்பான ஆசையினால் பூ வியாபாரியிடம் நாளும் மலர்களை பறித்து கொண்டு வரும்படி ஆணையிட்டான்.

 

தினமும் நந்தவனத்து மலர்கள் குறைவதை கண்ட சாரமா முனிவர் ஒருநாள் மலர் வியாபாரி அந்த மலர்களை பறிக்கும் போது பார்த்து பிடித்துவிட்டார். தாயுமானவருக்கு மட்டுமே உரிய அந்த மலர்கள் அரசனுக்கு கொண்டு கொடுக்கப்படுவது அறிந்து மிகவும் கோபமுடன் அரசரிடம் முறையிட்டார். மன்னரோ முனிவரை அலட்சியம் செய்து அந்த பூ வியாபாரி செயலை ஊக்குவிக்க மனம் நொந்து முனிவர் தாயுமானவரிடமே முறையிட்டார்.

 

இறைவன் தனக்கு செய்யும் எந்த குறைகளையும் கூட தாங்கி மன்னித்துவிடுவார் ஆனால் அடியார்க்கு செய்கின்ற இந்த இதுபோன்ற துன்பங்களை தாங்குவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மேற்கு மையமாக திரும்பி உறையூரை நோக்கியதால் மண்மாரி மழையாக பொழியத் தொடங்கியது இதனால் ஊரை மணல் மூடிக்கொண்டது.

 

இதனால் மிகவும் துன்பத்தில் ஆழ்ந்த அந்த உறையூர் மக்கள் தங்களைக் காக்க வேண்டும் என்று எல்லை தெய்வமாக காட்சியளித்த வெக்காளியம்மன் வழிபட அவர்கள் ஓலமிட்டு அம்மனை சரணடைந்தனர்.

 

மக்களின் இந்தப் பிரார்த்தனையால் மண்மாரி பொழிந்த அந்த மழை நின்றது ஆனால் மக்கள் அனைவரும் வீடுகளை இழந்து விட்டனர் வெட்ட வெளியாகவே தங்குமிடமாக மாறிப்போனது அந்த உறையூர் நகரம் மக்கள் துயரத்தைக் கண்டு அன்னை வெக்காளியம்மன் உங்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை நானும் உங்களை போல் வெட்ட வெளியிலேயே இருக்கிறேன் என்று அருளியதாக வரலாறு சொல்கிறது.  

 

அதனால் இப்பொழுதும் அந்த வெக்காளியம்மன் சன்னதி மேலே கூற இல்லாமல் திறந்த வெளியாக இருக்கும். வானமே கூரையாக கொண்டு அமர்ந்து பக்தர்களுக்கு என்றும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் உறையூர் வெக்காளியம்மன்.

 

கோவிலைச் சுற்றிலும் எழில்மிகு மண்டபம் இருக்க நடுவே வெட்டவெளியில் வெக்காளியம்மன் கருவறை இருக்கும் தெற்கு வடக்கிலும் வாயில்கள் இருந்தாலும் தார் சாலையை ஒட்டி தெற்கு வாயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் பெரும்பாலும் இந்த வாயில் வழியாக தான் கோவிலுக்குள் வருகின்றன. தெற்கு வாயில் வழியாக கோவிலுக்கு நுழைந்தால் இடது பகுதியில் வல்லபகணபதியும் விசாலாட்சி அம்மனுடன் விஸ்வநாதன் சன்னதியும் உள்ளது. இதற்கு அடுத்து காத்தவராயன் புலி வாகனத்துடனும் பெரியண்ணன் மதுரை வீரன் சன்னதிகள் அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து நாகப்பிரதிஷ்டையும் விநாயகர் சன்னதியும் இடம் பெற்றுள்ளது. அடுத்தது உற்சவ அம்மன் சன்னதியும் உள்ளது கோவில் திருவிழா காலங்களில் இந்த உற்சவ அம்மன் புறப்பாடாகும். அடுத்து சனி பகவானுக்காக தனியாக ஒரு சனீஸ்வரன் சன்னதியும் உள்ளது.

 

வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் அருள்மிகு வெக்காளியம்மன் தன்னுடைய மேற்கரங்களில் வலது புறம் உடுக்கையுடனும் இடதுபுற பாசம் கீழ்ப்புறம் வலது கரத்திலும் சூலம் இடது கரத்தில் கபாலத்துடன் வலது காலை மடித்து வைத்து இடது காலை தொங்கவிட்டு அரக்கனை காலால் மிதித்து கொண்டிருந்தவாறு அருள் பாவிக்கிறார்.

 

பொதுவாக அம்மன் வலது காலை தொங்கவிட்டு நிலையில்தான் அமர்ந்திருப்பது தான் வழக்கம். ஆனால் இந்த திருக்கோவிலில் மட்டும் வெக்காளியம்மன் இடது காலை தொங்கவிட்டு வலது காலை மடித்து வைத்து அருள்பாலிப்பது மிகவும் விசேஷமானது ஒன்றாகும்.

 

அருள்மிகு வெக்காளி அம்மனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு எலுமிச்சம் பழத்தின் மாலையாக கோர்த்து அணிவிக்கும் போது அவர்களுடைய பிரார்த்தனைகள் நிறைவேறுவதாக மக்கள் நம்பிக்கையுடன் செய்வார்.

 

திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் வெக்காளியம்மன் திருக்கோவிலுக்கு சென்று அந்த அம்மனை வணங்கி அருள் பெறுவோம்.

 

உஷா முத்துராமன்