tamilnadu epaper

எங்களுடையது குலதெய்வம் மானூர் பெரியாவுடையார் கோவில்

எங்களுடையது குலதெய்வம் மானூர் பெரியாவுடையார் கோவில்

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மானூர் பெரியாவுடையார் கோவில். இங்குள்ள கோவில் மேற்கு பார்த்த சிவாலயம் .மிக சக்தி வாய்ந்த அனுக்கிரக மூர்த்தி எந்த பிரச்சினையில் இருந்தும் காப்பாற்றக் கூடியவர். இவரை வழிபட்டால் தடைப்பட்ட திருமணம் நடந்தேறும் .குழந்தை பேறு, தகுதியான வேலை, எதிரி தொல்லை நீங்குதல் போன்ற பலன்களை பெறலாம். அது மட்டுமல்ல ஆனால் இவரை வணங்கினால் குழப்பம் நீங்கி மனதெளிவும் கிடைக்கும்.

தல பெருமை

கைலாயத்தில் ஞானப்பழம் முருகனுக்கு கிடைக்காமல் விநாயகருக்கு கிடைத்து விடுகிறது. இதனால் கோபம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்து விடுகிறார். முருகனைத் தேடிக் கொண்டு சிவனும் சக்தியும் பூலோகத்தில் பழனி மலைக்கு வந்து இறங்குகின்றனர். அப்படி இறங்கிய இடத்தில் இயற்கை

 

 அழகை கண்ட பரமேஸ்வரன் அங்கேயே வீற்றிருந்து அருள் பாலிக்க நினைத்தார்.

ஆனால் உமையவளோ தன் மகன் முருகனைக் காண பழனிக்கு செல்ல அனுமதிக்க வேண்டி சிவனிடம் வேண்ட சிவனும் சம்மதிக்கிறார் .சிவனை பிரிய மனமில்லாமல் நாயகி புறப்பட்டதால் அங்குள்ள அன்னை பிரியாநாயகி என்றும் விடை கொடுக்க மனம் இன்றி சிவன் விடை கொடுத்ததால் பிரியாவிடையர் என்றும் அழைக்கப்படலானார் .இதுவே காலப்போக்கில் பெரிய ஆவுடையார் பெரியநாயகி என்று மருவி அழைக்கப்பட்டது

பார்வதி முருகனைத் தேடி சென்று விட்டதால் இங்கு அம்மனுக்கு தனி சன்னதி கிடையாது. இருந்தாலும் சக்தி வேறு சிவம் வேறு இல்லை . எல்லாம் இங்கு ஒன்றுதான் .சிவனை வழிபட்டாலே சிவசக்தி வழிபட்ட பலன் கிடைக்கும்

இந்தக் கோவிலின் சிறப்பு அம்சம் மேற்கு பார்க்க அமைத்து இருப்பதும் சிவன் பீடம் சதுரமாக அமைந்திருப்பதுமாகும். அதுபோல இங்கு வடக்கு நோக்கி ஓடும் சண்முக நதியில் நீராடி சிவனை வழிபட்டால் ஏழேழு ஜென்மங்கள் செய்த பாவம் விலகும் என கூறுகின்றனர்.

.

பழனி முருகனை தரிசிக்க வருபவர்கள் முருகனை தரிசிப்பதற்கு முன்பாக இங்குள்ள சண்முக நதி தீர்த்தத்தில் நீராடி முருகனைத் தேடி வந்த தந்தையான சிவனை தரிசித்து விட்டு பழனி முருகனை தரிசித்தால் தான் முழு பலனும் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.

பழனி நகரில் எழுந்தருளியுள்ள பெரியநாயகி நாயக்கர் காலத்தில் கோவில் கட்டப்பட்டது .அதனால் சிவபெருமான் தன்னை உலகிற்கு எடுத்துக்காட்ட திருவிளையாடல் புரிந்தார். மகாராஜாவிற்கு வேட்டையாடுவதில் அலாதியான பிரியும் .ஒரு நாள் சிவன் மான் உருவம் கொண்டு மன்னன் முன் தோன்றினார் மயங்கிய மன்னன் அதை பிடிக்க மானை துரத்தினார் .மன்னன்பிடியில் சிக்காமல் மான் வடிவிலல் இருந்த சிவன்புதர் அருகே மறைந்து கொண்டது. மானை காணாமல் கோபம் கொண்ட மன்னன் வில்லில் அம்பேற்றி புற்றுக்குள் செலுத்தினார் .அங்கு ஒரு அற்புதம் நிகழ்ந்தது அம்பு செலுத்திய புற்றில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. இதனைப் பார்த்த மன்னன் புதரை விலக்கிப் பார்க்க அந்த புதருக்குள் இருந்த லிங்கத்தின் மீது அம்பு பட்டு ரத்தம் வடிந்தது .இதனை கண்ட மன்னன் இறைவனிடம் மண்டியிட்டு தன்னை மன்னிக்குமாறு வேண்டினான் .இறைவன் அசரீரியாக தம்மை வெளிப்படுத்தவே திருவிளையாடல் புரிந்ததாக கூறினார். இறைவன் கட்டளையை ஏற்று மன்னன் அந்த இடத்தில் கற்பகிரகம் அமைத்து பூஜை செய்தார் .மன்னன் மானை துரத்தி வந்ததால் இந்த ஊருக்கு மானூர் என்று பெயர் ஏற்பட்டது. இன்றும் லிங்கத்தின் அம்பு பட்ட தழும்பினை அபிஷேகத்தின் பொழுது காணலாம்.

புராண சிறப்பு வாய்ந்த மானூர் பெரியா உடையார் கோவிலுக்கு நீங்களும் வந்து வணங்குங்கள் மன அமைதியோடு மனதெளிவோடும் பழனி முருகனையும் தரிசித்து வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.

கட்டுரை எழுதியவர்:பவானி-வெற்றிவேல்,மணமேல்குடிசெல்9715275094