tamilnadu epaper

ஏப்ரல் 23 யூடியூப் தினம்

ஏப்ரல் 23 யூடியூப் தினம்


ஏப்ரல் 23 யூடியூப் தினம் எனலாம். முதன் முதலில் 2005 ல் இதன் இணை நிறுவனர் ஜாவேத் க்ரீம் அவர்களை சான் டியாகோ மிருகக்காட்சி சாலையில் காட்டுகிறது. அதுவும் 'நான் மிருகக்காட்சி சாலையில்' என்ற தலைப்பில் 18 விநாடிகள் காட்டப்படுகின்றது.


இந்த வீடியோ 2014 வரை 13 மில்லியனுக்கும் மேலாக பார்க்கப்பட்டதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றது.


விஞ்ஞான மாயக்கண்ணாடி என்றழைக்கப்படும் யூடியூபை ஊழியர்கள் 'சட் ஹர்லி' 'ஸ்டீவ் சென்' மற்றும் ஜவேத் கரீம் என்பவர்களால் தொடங்கப்பட்டது.


2005ஆம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி தொழில்நுட்ப யுகத்தில் கால்பதித்தது எனலாம்.


பிறகு கூகுள் நிறுவனம் அதை வாங்கியது. அப்போதிருந்ததைவிட தற்போது பல மில்லியன்கள் டாலர்கள் மதிப்பு உயர்ந்துள்ளது.


2005 அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வந்த இந்த தளம் இன்னும் சில நாடுகளுக்கு 2007ல் வெளிவந்தது.


இந்தியாவில் இந்த யூடியூப் 2008ல் மே ஏழாம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.


ஒரு திரைப்படம் வெளிவருவதற்கு முன் பார்வையாளர்களை கவர இதன் மூலம் டீசர்கள், சில முக்கிய காட்சிகள் இடம்பெற செய்து பார்வையாளர்களை கவர பெரும் ஆயுதமாக பயன்படுகிறது.


தற்போதைய காலகட்டத்தில் தொழில் நுட்பம் அதிக அளவில், அதிவிரைவில் வளர்ந்து கொண்டிருக்கின்றது.


வாட்சாப், யூடியூப், கூகுள், இன்ஸ்ட்டா என்று எத்தனையோ வகையில் பயன்படுத்தி வருகிறோம்.


இந்த செயலிகளால் நன்மையா தீமையா என்று எத்தனை பட்டிமன்றங்கள் வைத்தாலும் நடுவர் தீர்ப்பு வழங்க சற்று தடுமாறுவதை காணலாம்.


யூடியூப் என்பது நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி முன்னேறி வருகிறது.


அரசியல், சினிமா, ஆன்மீகம், கலைத்துறை, சமையல் கலை, கைவினை, வேலை வாய்ப்பு, கதை கவிதை வாசிப்பு என எண்ணிலடங்கா வகைகளில் நமக்கு வீடியோக்கள் மூலமாக செய்திகளை தருகிறது.


இதனை தவறாக பயன்படுத்தி கம்பி எண்ணுபவர்களும் உண்டு. ஒரே செய்தியை பலரும் பல கோணத்தில் அளிப்பது வியப்பை தரும்.


எதை எடுத்தாலும் யூடியூப் இருக்கிறது, அதில் பார்த்துக் கொள்ளலாம் என்ற வசதியும் தெம்பும் தருகிறது.


எத்தனையோ வகைகளில் பல்லாயிரக்கணக்கானோர் பயன் பெறுகின்றனர் என்பதை மறுக்க முடியாது.


சிலர் இதனை வேறுவிதமாக பயன்படுத்துவதும் மனதிற்கு சங்கடம் தருவதுண்டு. இருப்பினும் இது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது என்பது உண்மைதான்.


வருமானம் அதிகம் ஈட்டப்படும் ஒரு தகவல் தொடர்பு சார்ந்த தொழில் நுட்பம் இது. பலருக்கும் பலமடங்கு வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாக அறிய முடிகிறது.


இருப்பினும் சிலருக்கு இந்த அதிர்ஷ்டம் இருப்பதில்லை.  

யூடியூப் 'ரீல்ஸ்' பன்மடங்கு அதிகரித்து வருகிறது எனலாம். ஒன்றுமில்லாவிட்டாலும் லைக்ஸ் மற்றும் வியூஸ் உச்சம் தொட்டிருக்கும். பொழுது போக்காக செய்து சம்பாதிக்க சிறந்த சாதனமாக உள்ளது என்றால் மிகையாகாது.


-வி.பிரபாவதி

மடிப்பாக்கம்.