tamilnadu epaper

ஐபிஎல் போட்டியில் மிரட்டிய கேரள ஆட்டோ ஓட்டுநர் மகன்

ஐபிஎல் போட்டியில் மிரட்டிய  கேரள ஆட்டோ ஓட்டுநர் மகன்

8ஆவது சீசன் ஐபிஎல்தொட ரின் 3ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை - மும்பை அணிகள் பலப் பரீட்சை நடத்தின. தமிழ்நாடு தலைநகர் சென்னையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

இந்த போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்தாலும், அந்த அணி யின் இளம் பந்துவீச்சாளர் (இடதுகை ஸ்பின்னர்) விக்னேஷ் புத்துர் (24), 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து சென்னை அணியை மிரட்டினார். விக்னேஷ் புத்துரின் அபார ஆட்டத்தால் ஆட்டம் இறுதி வரை பரபரப்பாக நீண்டது. ரச்சின் ரவீந்திராவை தவிர மற்ற சென்னை பேட்டர்கள் விக்னேஷ் புத்துரின் பந்து வீச்சில் கடுமையாக திணறினர். யார் இந்த விக்னேஷ் புத்துர்? ஐபிஎல் போட்டிக்கு முன்னர் விக் னேஷ் புத்துர் பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால் சென்னை அணிக்கெதிரான போட்டியின் பின்பே விக்னேஷ் புத்துர் யார் என்பது கிரிக்கெட் உலகத்திற்கு தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த வர் விக்னேஷ் புத்துர். ஜூனியர் மாநில, தேசிய அணிகளுக்காக விளையாடாத இவர், கேரள கிரிக்கெட் லீக் டி-20 தொடரில் ஆலப்புழை ரிப்பில்ஸ் அணிக்காக விளை யாடினார். இந்த தொடரில் அவர் பெரிய அளவில் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும், அவரது பந்துவீச்சு ஸ்டைலை கண்ட மும்பை அணி நிர்வாகம் தென் ஆப்பிரிக்க டி-20 லீக் தொடரில் தனது மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கு வலைப் பந்துவீச்சாளராக விக்னேஷ் புத்துரை அனுப்பி வைத்தது. தொடர்ந்து ஐபிஎல் ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது மும்பை அணி நிர்வாகம். 

தனது திறமை மற்றும் மும்பை அணியின் உதவியால் விக் னேஷ் புத்துர் கிரிக்கெட் உலகின் பிரபலமா னவர்களின் பட்டியலில் உயர்ந்துள்ளார். தமிழ்நாட்டிலும் விளையாடியவர் விக்னேஷ் புத்துர் ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர். இவரது தந்தை ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். ஏழ்மை குடும்பத்தில் பிறந்து தனது அயராத உழைப்பால் ஐபிஎல் போட்டியில் இடம்பிடித்துள்ளார். விக்னேஷ் புத்துர் தமிழ்நாட்டின் டிஎன்பி எல் கிரிக்கெட் தொடரிலும் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.