tamilnadu epaper

கதையே மாறிப் போச்சு.....!

கதையே மாறிப்   போச்சு.....!

அலுவலக வேலையாக வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பிய சுந்தரம், வீட்டுக்குள் நுழையும் போதே மனைவி ராதா விடம் ஜெகன் வந்தானா என்று கேட்டதுமே வந்தான்....வந்தான்.... இன்னமும் அவன் மாறவே இல்லீங்க.... அவன் பொண்டாட்டி சொல்றபடி தான் நடந்துக்கிட்டு இருக்கான்.....

ஏன்... என்னாச்சு என்றான் சுந்தரம்....

பின்னே என்னாங்க....

அவனுக்கு புத்தி சரியில்லேன்னு நினைக்கிறேன்....

ராதா.....இப்ப நீ என்னா சொல்ற....முழுசா சொல்லி த் தொலை.....என்னைப் போட்டு குழப்பாத.... நான் கேட்ட கேள்விக்கு தெளிவா பதிலைச் சொல்லு.....!

நீங்க என்னா கேட்டீங்க..... ஜெகன் வந்தானான்னு கேட்டீங்க.... அதான் சொல்றன்ல.....வந்தான்.... வந்ததும் என்னா தெரியும்ல செஞ்சான்!

வீட்டு வாசலுக்கு வந்ததும்,வீடு பூட்டியிருந்ததை பார்த்துட்டு பெரிய கல்லை எடுத்து பூட்டை உடைக்க பார்த்தான். எதிர்வீட்டுக்காரு இதை பார்த்துட்டு தம்பி....தம்பி....அவசரப்படாதீங்க.... கோவிலுக்கு போயிருக்காங்க....இப்ப வந்துடுவாங்க...அது வரை நீங்க இங்க வந்து உட்காருங்கன்னு....ஜெகனை க் கூப்பிட்டாரு.....!

ராதா....நீ... என்னா சொல்ற? எனக்கு எதுவுமே புரியலை....லீவுல இருக்குற என் ஆபீஸ் பிரண்ட் ஜெகன் வந்தானான்னுதான கேட்டன்....நீ என்னமோ....வீடு பூட்டியிருந்துச்சு..... வீட்டுப் பூட்டை உடைக்க பார்த்தான்னு வேற சொல்ற....அது எப்படி நம்மை வீட்டு பூட்டை ஜெகன் உடைக்கப்பார்த்தான்னு, என்னன்னமோ சொல்ற....? எனக்கு ஒரே குழப்பமா இருக்கு! 

அது சரி...வீட்டைப் பூட்டிட்டு நீ எங்கே போயிருந்த....?

நான் எங்கேயும் போகலீங்க.....வீட்டுலதான் இருந்தன்... நான் வெளியே போனா உங்ககிட்ட சொல்லாம போவனா? நீங்க உங்க பிரண்டைப் பத்தி கேட்கறதையே நான் மறந்துட்டு, ஏதோ நினைப்புல மதியம் டிவியில ஒடற 

" ஒரு வீட்டின் கதை"

தொடருல வர்ற ஜெகனைப் பத்தி சொல்லிபுட்டன் என்று ராதா அசடு வழிய நின்றாள்...!

        ++++++++++++

 

நன்னிலம் இளங்கோவன்,

9442567827.