tamilnadu epaper

கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நள்ளிரவு முதல் அமல்!

கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி  விதிப்பு நள்ளிரவு முதல் அமல்!

கனடாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை செவ்வாய்க்கிழமை மார்ச் 4ம் தேதி நள்ளிரவு 12.01 மணியிலிருந்து அமலுக்கு வந்திருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 


டிரம்ப் அமெரிக்க அதிபரானதும் கொண்டுவந்துள்ள வரி விதிப்பு நடவடிக்கையின்படி, கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவுக்கு கனடாவும் அமெரிக்க பொருள்களுக்கு வரி விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.