கருட புராணம்...!!
சிரார்த்தம் செய்யும் முறைகள் :
இறந்துவிட்ட பெற்றோர்களுக்கு புத்திரர்கள் ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்ய வேண்டும். தந்தையானவர் தன்னுடைய பிள்ளைக்கும், உடன்பிறந்த சகோதர, சகோதரிகளுக்கும் சிரார்த்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் தன்னுடைய தலைமுறையில் உள்ளவர்களை குறிப்பிடாமல் இறந்து போனவர்களை மட்டும் குறித்து திதி செய்தல் வேண்டும். இறந்தவர்களுக்கு சிரார்த்த பூஜைகள் செய்கின்ற பொழுது ஏதேனும் தீட்டு ஏற்பட்டால் அந்த தீட்டு காலங்கள் நிறைவடைந்தவுடன் இறந்தவர்களுக்கு திதி கொடுக்க வேண்டும்.
தமக்கு தீட்டு இருக்கும்பட்சத்தில் இறந்து போனவர்களுக்கு திதி கொடுத்தால் திதியின் பலன்களானது இறந்தவர்களை சென்றடையாது. ஒருவேளை பெற்றோர்களுக்கு அவர்களுடைய குழந்தை சிறுவயதாக இருக்கும்பட்சத்தில் சிரார்த்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குழந்தையின் கரங்களிலிருந்து தர்ப்பைப்புல்லினை வாங்கி இறந்தவர்களுடைய உறவினர்கள் இறந்தவர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம். இதனால் குழந்தைக்கோ அல்லது சிரார்த்தம் செய்த பெரியோருக்கோ எந்தவிதமான தீவினைகளும், தோஷங்களும் ஏற்படாது.
ஒருவருடைய உறவினர்கள் யாவரும் வேறு தேசங்களில் தங்கியிருக்கும் சூழ்நிலையில், அவர்கள் ஒரு சில நிகழ்வுகளின் காரணமாக அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டால், முதலில் யாருடைய இறந்த செய்தியை கேள்விப்பட்டார்களோ அவர்களுக்கு முதலில் சிரார்த்தம் கொடுக்க வேண்டும். பின்பு அடுத்தடுத்ததாக இறந்தவர்களுக்கான கர்ம நிகழ்வுகளையும், சிரார்த்ததையும் செய்தல் வேண்டும். ஒருவர் இறந்து போன நாள் தெரிந்து, மாதமும் மற்றும் அவர் இறந்து போன திதியும் தெரியாமல் போனால் ஆடி, புரட்டாசி, மார்கழி மற்றும் மாசி ஆகிய மாதங்களில் தேய்பிறையில் வருகின்ற அஷ்டமி தினத்திலும், அமாவாசை தினத்திலும் சிரார்த்தம் செய்து கொள்ளலாம்.
ஒருவர் வேறு தேசத்திற்கு பயணம் மேற்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அவ்விடத்தில் அவர் இறந்துவிட்டால் அவர் இறந்து போன நாளும், மாதமும் தெரியாமல் இருக்கும்பட்சத்தில் அவர் வெளிநாடு செல்வதற்கு புறப்பட்ட நாளில் உள்ள திதியில் சிரார்த்தம் செய்து கொள்ளலாம். தாய், தந்தையர்கள் இறந்து போன திதியும், கிழமையும், தேதியும் தெரியாமல் இருக்கும்பட்சத்தில் அஷ்டமி, ஏகாதசி மற்றும் அமாவாசை முதலான நாட்களில் ஏதாவது ஒரு நாட்களில் நீத்தார் கடனை கழிக்கலாம். பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யாமல் இருப்பது மகா பாவமாகும். நித்திய திருத்தத்திற்கு எந்த விதியும் இல்லை. நித்திய சிரார்த்தம் செய்வதினால் அசுபம் குறைந்து சுபம் மேம்படும்.
விநதாவின் புத்திரரான கருடாழ்வார், பகவானே மானுடராக பிறப்பெடுத்த ஒருவர் முன்ஜென்ம பாவ புண்ணியங்களின் விளைவாகத்தான் இதனை நாம் அனுபவிக்கின்றோம் என்பதனை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? என்று வினவினார்.
ஓநாயாக பிறப்பவர்கள் யார்?
கருடா...!! நாம் செய்கின்ற ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினைகளும், நல்வினைகளும் இருக்கின்றன. அதனை உணர்ந்து நாம் செய்கின்ற செயல்களின் தன்மைகளை அறிந்து செயல்பட வேண்டும். இன்றைய லாபத்திற்காக எதிர்கால பலனை அறியாமல் செய்வது என்பது நன்மையன்று. ஆகவே இன்று நாம் ஒரு காரியத்தை செய்கின்றோம் என்றால், நாளை அந்த காரியத்தின் விளைவு என்னவாக இருக்கும்? என்பதனை சிந்தித்து செயல்படுதல் மிகவும் அவசியமாகும்.
மானுடராக பிறப்பெடுத்த ஒருவர் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலக்கட்டங்களில் தான் செய்த செயல்களின் தன்மையின் விளைவினை அறியாமல் செய்து, நாம் செய்த செயலினால்தான் இந்த தீய வினைகள் ஏற்பட்டுள்ளன என்பதை அறிந்ததும், மனதளவில் செய்த செயல்களுக்கான தண்டனைகளை அனுபவித்ததும், சுயநல எண்ணம் இல்லாமல் ஆன்மீக சிந்தனைகளிலும், இறைவழிபாட்டிலும் நம்பிக்கை கொண்டு... அறிவிலும், வேதத்திலும் நன்கு சிறந்து விளங்கக்கூடிய சான்றோர் பெருமக்களிடம் சென்று அவர்களிடம் தாம் செய்த செயல்களின் தன்மையையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் எடுத்துரைத்து செய்த செயலுக்கான பிராயச்சித்த கர்மாவினை செய்தல் அவசியமாகும்.
எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தாம் செய்த செயல்களின் விளைவுகளையும் அறிந்து, மற்றவர்கள் துன்பப்படுவதை பொருட்படுத்தாமல் தான் மட்டும் சுயநலமாக வாழ்ந்து, இறந்து போனவரின் ஆத்மா எமலோகத்தை அடையும் முன்பு பலவிதமான இன்னல்களுக்கு ஆட்பட்டு எமலோகத்தில் எமதர்ம சபையில், எமனின் முன்னிலையில் மண்ணுலகில் கிடைக்காத (நீதி) அறத்திற்கு புறம்பான செயல்களில் இருந்து தப்பித்த உடல் உள்ள ஆன்மா, உடலற்ற நிலையில், எமனின் முன்னிலையில் ஆன்மா நிலையில் நிற்கும் பொழுது செய்த வினைகளின் விளைவாக எள்ளளவும் குறைவில்லாமல் தண்டனைகளை அனுபவிக்கும். அந்த தண்டனைகளின் விளைவாக நரகத்தில் வாசம் செய்த எண்ணத்தோடு மீண்டும் மண்ணுலகில் ஓநாயாகவோ, நரியாகவோ பாவம் செய்த ஆன்மா பாவத்தின் விளைவுக்கு ஏற்ப பிறப்பெடுத்து வாழ்கின்றது.
பிழையில்லா தீர்ப்பு எங்கு?
மானுடர்கள் வாழக்கூடிய உலகத்தில் செய்த செயல்களுக்கான தண்டனைகள் கிடைக்காமல் தன்னிடம் இருக்கக்கூடிய பொருள் செல்வத்தையும், தனவலிமையையும் கொண்டு தப்பித்துக்கொள்ள முடியும். ஆனால் இறந்த பின்பு எமனின் லோகத்தை அடைந்தபோது எந்தவிதமான செல்வமும் அந்த இடத்தில் செய்த பாவத்திற்கு இணையாகாது. நாம் செய்கின்ற நல்வினைகள் மட்டுமே எமனின் சபையில் நிரந்தரமானதாக இருக்கும். எமனின் தீர்ப்பில் எள்ளளவும் பிழைகள் இருக்காது.
ஊமையாக பிறக்கக்கூடியவர்கள் யார்?
நிகழ்ந்த உண்மைகளை நிறைவாக நன்கு தெரிந்த ஒருவர் பொருள் செல்வத்திற்காக தனக்கு தெரிந்த உண்மைகளை தெரிந்தும், அதை அனைவரின் முன்னிலையில் உரைக்காமல் நிகழ்ந்ததற்கு மாறாக பொய்யாக சாட்சி அளிக்கக்கூடியவர்கள் ஊமையாக பிறப்பார்கள். எதையும் அறியாமல் வெறும் பொருள் செல்வத்திற்காக பொய்யான சாட்சிகளை கூறி பாவம் செய்தவர்கள் இறந்த பின்பு பிறப்பெடுக்கும் மறுபிறவிகளில் திக்கித்திக்கி பேசக்கூடியவராக பிறக்கின்றார்கள்.
பொய் சொன்னவர்களுக்கு அடுத்த பிறவிகளில் தான் நினைத்த கருத்துக்களை வெளிப்படுத்தும் திறமை என்பது இருக்காது. படித்தவராக அல்லது கல்வி கற்றவராக இருந்தாலும் சபையில் ஏறிய பின்பு வார்த்தைகள் பேசுவது என்பது அவரால் முடியாத ஒன்றாக இருக்கும். மனிதர்களின் வாழ்க்கையில் புதியதொரு மாற்றம் என்பது திருமண வாழ்க்கை ஆகும். அந்த திருமண வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்பே பலவிதமான பொய்களை கூறி அந்த வாழ்க்கையை எவர் ஆரம்பிக்கின்றார்களோ அவர்கள் அனைவரும் அடுத்தடுத்த பிறப்புகளில் ஊமையாக பிறப்பார்கள்.
எந்தவொரு இனமும் தன்னுடைய இனத்தை அழித்து அதில் சுகம் காண்பதில்லை. மாறாக மனிதர்கள் பொருள் செல்வத்திற்காக தன்னை போன்ற சக மனிதர்களையும் கொன்று, அதனால் பூமியில் சுகமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் செய்த பாவத்தின் விளைவினால் உருவாகக்கூடிய பிறப்புகளின் விளைவு என்பது அவர்கள் எண்ண முடியாத அளவில் மிகவும் கொடூரமானதாக இருக்கும். முற்பிறவிகளில் கொலை செய்தவன் செய்த செயலின் விளைவாக அடுத்த பிறவியில் மற்றவர்கள் பார்க்க முடியாத அளவில் உடல் அங்கஹீன குறைபாடுகளுடனும், குஷ்டரோகத்துடனும் எவருடைய முகத்திற்கும் தெரியாமல் வாழ வேண்டிய சூழ்நிலையில் பிறப்பார்கள்.
தனக்கு ஏன் இந்த பிறப்பு நிலை? என்று வருந்தும் அளவில் அவர்களுக்கு பிறப்பு அமைந்திருக்கும். மற்ற பிறவிகளைக் காட்டிலும் பகுத்தறிந்து தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதில் நன்முறையில் இருக்கக்கூடிய பிறவி என்பது மானுட பிறவி ஆகும். அப்படி அரிதான பிறப்பான மானுட பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்க்கையில் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும், பேச்சுக்களுக்கும் பலன்கள் உள்ளன.
நாம் உரைக்கும் ஒரு சிறு பொய் யார் மனதையும் புண்படுத்தவோ, கஷ்டப்படுத்தவோ கூடாது என்பதில் கவனமாக இருத்தல் வேண்டும். மற்ற உயிரினங்களைக் காட்டிலும் சிறந்த உயிரினமாக இருக்கக்கூடிய பிறப்பு என்பது மானுட பிறப்பாகும். அப்படிப்பட்ட உன்னதமான பிறவி எடுப்பதற்கு அவர்கள் செய்த நல்வினைகள் மட்டுமே துணை நிற்கின்றன. பல பிறப்புகளில் செய்த நல்வினை பயனாக மட்டுமே அவர்கள் மானுடர்களாக பிறப்பெடுக்கின்றனர்.
அப்படி கிடைக்கும் அரிதான பிறப்பில், அவர்கள் செய்யும் தீய கர்ம வினைகளினால் மீண்டும் பிறப்பெடுத்து துன்பத்தை அவர்களே உருவாக்கிக் கொள்கின்றார்கள். செய்த வினைகள், எமனை காட்டிலும் தண்டனையை அனுபவிக்க வைக்கக்கூடிய ஆற்றலையும் கொண்டு இருக்கக்கூடியதாகும். எமன் ஒருவரே உயிரினங்களின் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை அளிக்கக்கூடியவர். அவருக்கும் நிகராக கர்ம வினைகளே அவரை வழிநடத்தி செல்லும். ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு நிகரான நற்பலன்களும், தீய பலன்களும் இருக்கின்றன என்பதை யாவரும் உணர்ந்து இருக்க வேண்டியது அவசியம்.
செவிடனாக பிறக்கக்கூடியவர்கள் யார்?
மானுடர்களின் வாழ்க்கையில் புதியதொரு அத்தியாயம் என்பது திருமண பந்தம் ஆகும். அந்த திருமண பந்தத்தில் கணவன், மனைவி இருவரும் ஒற்றுமையுடன் இருப்பது மட்டுமல்லாமல் உறவினர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். அவ்விதம் வாழும் பொழுது கணவன் தன் மனைவியின் பேச்சை கேட்டு கொண்டு தன்னுடைய பெற்றோர்களை கவனிக்காமல் இருப்பவர்கள் அல்லது கணவனின் பேச்சை கேட்டு கொண்டு மனைவியானவள் அவர்களின் பெற்றோர்களை கவனிக்காமல் இருப்பவர்கள், புறக்கணிப்பவர்கள் மட்டுமல்லாமல் திருமணத்திற்கு பின்பு எவ்விதமான பணிகளுக்கும் செல்லாமல் மனைவியின் உழைப்பிலேயோ அல்லது மனைவியின் குடும்பத்திலேயோ தங்கியிருந்து இன்பங்களை யார் அனுபவிக்கின்றார்களோ அவர்களே அடுத்தடுத்த பிறப்புகளில் செவிடனாக பிறப்பார்கள்.
திறமை இருக்கக்கூடிய கணவர்களை திறமையை வெளிப்படுத்தாமல் அடக்கி வைத்து அவர்களின் எண்ணங்களையும், செயல்பாடுகளையும் தவறான வகையில் வெளிப்படுத்தக்கூடிய மற்றும் கணவனை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கக்கூடிய பாவைகளும் செவிடர்களாக பிறப்பார்கள். திறமையுள்ளவர்களுக்கு அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அளிக்காமல் அல்லது அவர்களின் திறமையை யாருக்கும் தெரியாமல் மறைக்கக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் இறந்த பின்பு மறுபிறப்பு எடுக்கும் நிலையில் இருக்கும் பட்சத்தில் அவர்களும் செவிடர்களாக பிறப்பார்கள்.
நரக தண்டனையில் விழுந்து கிடப்பவர்கள் யார்?
தன்னுடைய சுகத்திற்காக மற்றவர்கள் குடியிருக்கும் இல்லத்தை அழிக்கின்றவரும், வனத்தை அழித்து அதை இருப்பிடமாக கொண்டிருக்கக்கூடிய உயிரினங்களை அளிக்கக்கூடியவரும், நரகத்தில் கிடந்து துன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருப்பார். தன்னுடைய தேவைக்காக மற்றவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய வீடுகளிலும் அல்லது பொருள் இல்லாதவர்கள் தங்கியிருக்கக்கூடிய மடங்களிலும், சிந்தித்து செயல்பட முடியாத உயிரினங்கள் இருப்பிடமாக கொண்டிருக்கக்கூடிய வனங்களை அழிப்பதற்காக தீயை வைக்கக்கூடியவர்களும் நரகத்தில் பல விதமான தண்டனைகளையும், இன்னல்களையும் அனுபவித்து பின்பு அவர் செய்த பாவங்கள் குறையாத பட்சத்தில் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டிய நிலையில் இருந்தால் அவர் நெருப்பு கோழியாக பிறப்பெடுத்து தனது கர்மாவினை குறைத்து கொள்வர்.
கல்வி கற்க முடியாதவர்கள் யார்?
சுற்றித்திரியும் விலங்குகளில் இருந்து சிறந்து விளங்கும் தன்மையை உருவாக்கக்கூடிய பக்குவத்தை கல்வியில் இருந்து மானுடர்கள் கிடைக்கப் பெறுகின்றார்கள். ஆகவே கல்வியை போதிக்கக்கூடிய குருவினை நன்கு மதிப்புடனும், மரியாதையுடனும் நடத்துதல் மிகவும் முக்கியமானதாகும். குருவினை மதிக்காமலும் அல்லது அவமரியாதை செய்யும் நோக்கத்தில், அவரிடம் இருக்கக்கூடிய பொருட்களை தன்வசமாக்கிக்கொள்ளும் எண்ணத்தில் அவரை ஏமாற்றும் நோக்கத்தோடு சென்று ஏமாற்றி வெற்றி பெறலாம்.
ஆனால், இறந்த பின்பு செய்த வினையின் பயனாக அடுத்தடுத்த பிறப்புகளில் அவரால் கல்வி கற்க இயலாது. அவர் அங்க குறைபாடுகளுடனும் பிறப்பார். குரு இல்லாமல் எந்தவொரு கலையையும் முழுமையாக கற்றுக்கொள்ள இயலாது. ஆகவே மானுடர்கள் பெற்றோர்களை எவ்விதத்தில் மதிக்கிறார்களோ, அவர்களுக்கு நிகராக குருவையும் மதிக்க வேண்டும்.
புற்றுநோய் யாருக்கெல்லாம் ஏற்படும்?
போதைப் பொருட்களையும், போதை பானங்களையும் முந்தைய பிறப்புகளில் உண்டவர்களுக்கு இந்த பிறவியில் எந்தவிதமான தீய பழக்கமும் இல்லாமல் இருந்தாலும், புழுக்களை உடைய பற்களுடனும், துர்நாற்றம் உடைய வாய்களையும் உடையவர்களாக இப்பிறப்பில் பிறப்பார்கள். அவர்களுக்கு வாயில் புற்றுநோயும் ஏற்படலாம்.
ஈனத்தொழில் செய்பவர்கள் யார்?
தன்னை நம்பி வந்த மனைவியை விடுத்து பல ஸ்த்ரீகளுடன் சேர்ந்து வாழ்ந்தவர்கள் மண்ணுலகில் தண்டனை கிடைக்காமல் தப்பித்து வந்து சுகமாக வாழ்ந்து வந்திருந்தாலும் அடுத்தடுத்த பிறப்புகளில் ஈனத்தொழில்களை செய்யக்கூடியவர்களாக பிறப்பு எடுப்பார்கள்.
வறுமையில் வாழக்கூடியவர்கள் யார்?
பொருள் செல்வங்கள் நன்கு இருந்தும், அதை நல்முறையில் செலவு செய்யாமல், எவருக்கும் கொடுக்க மனமில்லாமல் தான் மட்டுமே வைத்துக்கொண்டு எவ்விதமான செலவுகளையும், ஏன் அத்தியாவசிய செலவுகளையும் செய்யாமல் கஞ்சத்தனமாக வாழக்கூடியவர்கள் மறுபிறவியில் வறுமையில் வாழக்கூடிய குடும்பத்தில் பிறந்து துன்பத்தை அனுபவிப்பார்கள்.
Thanks and regards
A s Govinda rajan
17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai
7358228278
[15/05, 18:08] Tamilnadu Epaper: கருட புராணம்...!!
பன்றியாக பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
ஒருவர் ஒழுக்கம் இல்லாமல் தவறான வழிகளில் பொருட்களை சேர்த்துக் கொண்டு இருப்பவர் என்று நன்கு உணர்ந்தும் அதை பற்றி எவ்விதமான கவலையும் கொள்ளாமல் அவர் கொடுக்கும் பொருளுக்காக ஆசைப்பட்டு அவருக்கு புரோகிதம் செய்யக்கூடிய அந்தணர் பன்றி ஜென்மமாக பிறப்பார்.
கழுதையாக பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
நன்மை, தீமை என நன்கு உணர்ந்தவர்கள் அதை தெரிந்தே தவறுகள் செய்தாலும், வேதமும், சாஸ்திரமும் உணர்ந்தவர்கள் அறிந்து பாவங்களை செய்தாலும் அவர்கள் யாவரும் கழுதையாக பிறந்து பல சுமைகளை சுமக்க நேரிடும்.
பூனையாக பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
பலமான குரலை கொண்டு பலரையும் பயப்படும்படி செய்து அவர்களிடத்தில் பயத்தை ஏற்படுத்தி அவர்களை மிரட்டி தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்ளக்கூடியவர்களும், வழிப்பறி செய்து அதில் கிடைக்கும் பொருளைக் கொண்டு வாழ்ந்து மடிந்தவர்களும் அடுத்தடுத்த பிறப்புகளில் பூனையாக பிறந்து துன்பத்தை அனுபவிப்பார்கள்.
காளையாக பிறக்கக்கூடியவர்கள் யார்?
அறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கக்கூடிய சான்றோர் பெருமக்களை ஏமாற்றி அவர்களிடம் இருக்கக்கூடிய செல்வங்களை அபகரித்தவனும், கன்னி பெண்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவர்களை தன்னுடைய இச்சைக்கு பயன்படுத்தி, பின்பு அவர்களை பற்றி எவ்விதமான கவலையும் இல்லாமல் சுற்றி திரிகின்ற சிந்தித்து செயல்படக்கூடிய பகுத்தறிவாளர்களும் மறு பிறவியில் செய்த பாவத்தின் விளைவாக சுமைகளை கொண்ட வண்டிகளை இழுக்கும் மாடாக பிறப்பார்கள்.
பார்வை இல்லாதவர்களாக இருக்கக்கூடியவர்கள் யார்?
தன்னிடம் செல்வமும், அதிகாரமும் இருக்கின்றது என்பதற்காக தனக்கு எந்த விதத்திலும் தீங்கு செய்யாத நன் மக்களையும், சான்றோர் மக்களையும், உறவினர்களையும் பகைத்துக் கொள்ளக்கூடிய பகுத்தறிவாளர்களும், எவ்வித பயனும் அளிக்காத அற்ப சுகத்திற்காக அவர்களை ஏதாவது ஒரு விதத்தில் அவர்களின் நிலையில் இருந்து இறக்கி விட வேண்டும் என்று சிந்தித்து செயல்படக்கூடியவர்களும், அடுத்தடுத்து எடுக்கும் பிறப்புகளில் குருடர்களாக பிறப்பார்கள். மானுடனாக பிறப்பெடுத்த பின்பு அவர்களுக்கு நன்மை எது? தீமை எது? என்று பிரித்து உணரும் தன்மையை கொடுக்கக்கூடிய கல்வியை உள்ளடக்கிய புத்தகங்களை திருடிய கயவன் அடுத்தடுத்து எடுக்கும் பிறப்புகளில் குருடர்களாக பிறப்பார்கள்.
பறவையாக பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
தன்னை நாடி வந்திருக்கக்கூடிய விருந்தினர்களுக்கு உணவும், உபசரிப்பும் செய்யாமல் அவர்களின் மனதை புண்படுத்தி அல்லது எவ்விதமான மரியாதையும் இன்றி அவர்களை திருப்பி அனுப்பக்கூடியவர்கள் அடுத்து பிறக்கும் ஏழு பிறவிகளிலும் காக்கைகளாகவும், கழுகுகளாகவும் பிறப்பார்கள்.
ஓணானாக பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
தங்களுடைய முன்னோர்கள் மற்றவர்களுக்கு தானமாக கொடுத்த பொருட்களின் இன்றைய விலையை கணக்கில் கொண்டு அவர்களிடம் இருந்து தானமாக கொடுத்த பொருட்களை திருப்பி வாங்குபவர்கள் ஓணானாக பிறப்பார்கள். ஒருவேளை செய்த புண்ணியத்தின் பலனாக மானுட பிறவி எடுக்கும் நிலையில் இருந்தாலும் அவர்களுடைய ஆயுள் குறைந்த அளவிலேயே இருக்கும். தனக்கு பலவிதமான கலைகளையும் கற்றுக் கொடுத்த குருவின் மனைவியின் மீது ஆசை கொள்ளக்கூடிய நயவஞ்சகர்களும் அடுத்தடுத்த பிறப்புகளில் ஓணானாக பிறப்பார்கள்.
கொடூரமான விலங்காக பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
வேதத்தின் உட்பொருளை அறிந்தவர்களையும், சான்றோர் பெருமக்களையும் தன்னுடைய சுயநலத்திற்காக விமர்சித்து அவர்களை துன்பப்படுத்தக்கூடிய நயவஞ்சகர்களான எதையும் சிந்தித்து செயல்படக்கூடிய பகுத்தறிவாளர்கள் இறந்த பின்பு அவர்கள் எடுக்கும் அடுத்தடுத்த பிறப்புகளில் புலி, சிங்கம் போன்ற கொடூரமான விலங்காக பிறப்பார்கள்.
மீனாக பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
தன்னிடம் இருக்கக்கூடிய அதிகார பலத்தையும், செல்வ வளத்தையும் கொண்டு பல ஆயிரம் மக்கள் பயன்படுத்தக்கூடிய குளம், கிணறு போன்றவற்றை மூடி, அதை தன்னுடைய சுய லாபத்திற்காக விற்று அதன்மூலம் சுகமாக வாழ்ந்து வந்தவர்கள் இறந்த பின்பு செய்த வினையின் பயனாக மீனாக பிறப்பெடுத்து வாழ்வார்கள். மேலும், மானுடராக பிறந்தவர்களுக்கு உடல் ஊனம் என்பது இயல்பான ஒன்றாகும். அவர்கள் செய்த பாவ, புண்ணியத்தின் அளவிலேயே அவர்களுக்கு அந்த ஊனமானது ஏற்படுகின்றது. அந்த உடல் ஊனத்தையும் கேலி செய்து அதன் மூலம் மகிழ்ச்சி அடையக்கூடிய பகுத்தறிவாளர்கள் இறந்த பின்பு ஏழு ஆண்டுகள் மீன்களாகவும், மூன்று ஆண்டுகள் பன்றியாகவும், ஏழு ஆண்டுகள் முயலாகவும், ஏழு ஆண்டுகள் கோழியாகவும் பிறப்பெடுத்து செய்த பாவத்தினை தூய்மைப்படுத்திய பின்பே மீண்டும் மனிதர்களாக பிறப்பார்கள்.
அருவருக்கும் வகையில் தோற்றம் கொண்டவர்களாக பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
உலக வாழ்க்கையையும், நன்மைகள் மற்றும் தீமைகளையும் பகுத்தறிந்து உணரும் கல்வியை போதிக்கக்கூடிய குருமார்களின் மனைவியின் மீது இச்சை கொண்டு அவர்கள் அறிந்தோ, அறியாமலோ அவர்களை தன்னுடைய சுய லாபத்திற்காக பயன்படுத்தி கொண்டவர் அடுத்தடுத்த பிறப்புகளில் யாராலும் காண முடியாத வகையில் அருவருக்கும் வகையில் தோற்றம் கொண்டவராக பிறப்பார்கள்.
கோட்டானாக பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
தங்களிடம் இருக்கக்கூடிய பொருள் பலத்தினையும், செல்வ வளத்தையும் கொண்டு தனக்கு கீழ் இருப்பவர்களுக்கு அநியாயம் செய்தும், தர்ம நியதிப்படி செயல்படாமல் அதற்கு எதிராக செயல்படக்கூடியவர்கள் அடுத்தடுத்த பிறப்புகள் எடுக்கும்பொழுது கோட்டானாக பிறப்பார்கள்.
தவளையாகவும், அட்டையாகவும் பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
தனக்கு பிறந்த புத்திரர்களை பொருள் செல்வத்திற்காக விற்பவர் ஏழு ஆண்டுகள் வரையில் தவளையாகவும், ஏழு ஆண்டுகள் வரை அட்டையாகவும் வாழ வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
குரங்காக பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
வெட்டவெளியில் அமர்ந்து உணவு உண்பவர்கள் அல்லது மற்றவர்களை பார்க்க வைத்து உண்ணக்கூடியவர்களும் அடுத்த பிறப்புகளில் குரங்காக பிறப்பெடுப்பார்கள்.
கருங்குரங்காக பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
நன்றாக உழைத்து அதன் மூலம் கிடைத்த பொருளைக் கொண்டு உணவு உண்ண வருகையில் அவர் உண்ணும் உணவில் அவருக்கே அறியாமல் பழைய சோற்றையும் அல்லது நலம் இல்லாத உணவுப்பொருட்களையும் கலந்து விற்பனை செய்பவர்கள் அடுத்தடுத்த பிறப்புகளில் கருங்குரங்காக பிறப்பார்கள். உத்தியோகம் மற்றும் பணிகளில் கடுமையாக உழைத்து வந்த தன்னுடைய வாழ்க்கைத் துணைவரின் பசியை அறிந்தும் அவருக்கு தேவையானவற்றை நிறைவேற்றி வைக்காத அவர்களுடைய துணைவியாரும் அடுத்தடுத்த பிறப்புகளில் கருங்குரங்காக பிறப்பார்கள்.
நாயாக பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
மானிடர்களின் சிந்தித்து செயல்படும் தன்மையை இழக்கச் செய்யக்கூடிய போதைப்பொருட்களை எந்த இடத்திலும், யார் பார்த்தாலும் உண்ணக்கூடிய பகுத்தறிவாளர்கள் நாயாக பிறப்பார்கள்.
மின்மினி பூச்சிகளாக பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
நன்றாக வளர்ந்திருக்கும் பயிர்களை தன்னுடைய கோபத்திற்காகவும், சுய லாபத்திற்காகவும் எரிக்கக்கூடிய மனப்பக்குவம் உடைய பகுத்தறிவாளர்கள் இறந்த பின்பு மின்மினி பூச்சிகளாக பிறப்பார்கள்.
புழுக்கள் நிரம்பி வழியும் நரகத்தில் சுற்றித்திரியக்கூடியவர்கள் யார்?
கடினமான உழைப்பின் மூலம் கிடைக்கக்கூடிய பொருளைக் கொண்டு தங்கம், வெள்ளி முதலிய பொருட்களை வாங்கக்கூடியவர்களிடத்தில் அதில் கலப்படம் செய்யக்கூடியவர்களும், நயவஞ்சகமாக அவர்களிடத்தில் இருக்கக்கூடிய பொருட்களைத் திருடக்கூடியவர்களும், புழுக்கள் நிரம்பி வழியக்கூடிய நரகத்தில் வேலை செய்வார்கள். ஒருவேளை செய்த புண்ணியமானது அவரை காக்கும் பட்சத்தில் மானுட பிறப்பாக பிறந்தால் சூலை நோயினால் அவதிப்பட்டு துன்புறுவார்கள்.
உடும்பாக பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
மற்றவர்களுடன் இருக்கக்கூடிய ஆடைகளின் மீது ஆசை கொண்டு அதை திருட வேண்டும் என்ற எண்ணத்தால் ஆடை வியாபாரிகள் அசந்து இருக்கும் சமயத்தில் அபகரிக்கக்கூடியவர்கள் அடுத்தடுத்த பிறப்புகளில் உடும்பாக பிறப்பார்கள்.
பாம்பாக பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
பிறரிடம் இருக்கும் செல்வத்திற்காக ஆசைப்பட்டு அவர்களை நயவஞ்சகமாக ஏமாற்றி அவர்கள் உண்ணும் உணவில் அல்லது அவர்கள் அறியாத விதத்தில் அவர்களிடத்தில் விஷத்தை கொடுத்து கொல்லக்கூடிய சிந்தித்து செயல்படும் பகுத்தறிவாளர்கள் இறந்த பின்பு அடுத்தடுத்து எடுக்கும் பிறப்புகள் பாம்பாக பிறப்பார்கள். வீர சாகசம் செய்வதாக எண்ணி சுற்றித்திரிந்து கொண்டிருக்கின்ற பாம்பினை பிடித்து அதை துன்புறுத்தியோ அல்லது அதை கொல்லக்கூடிய மனிதர்கள் பாம்பாக பிறப்பார்கள். ஒருவேளை அவர் மானுடனாக பிறந்தால் அவர்களின் சந்ததி விருத்தி அடையாது.
நோயாளியாக பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
கால்நடை பிராணிகளை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து அந்த பிராணிகள் அனுபவிக்கும் துன்பத்தை கண்டு இன்பம் அடையக்கூடிய பகுத்தறிவாளர்கள் அடுத்து எடுக்கும் பிறப்புகளில் கொடூரமான நோய் தாக்குதலுடைய உடல் அமைப்பைக் கொண்ட பிறப்பாக பிறந்து பிறவி முழுவதும் ஏன் இப்படி ஒரு பிறப்பினை எடுத்தோம்? என்று துன்பப்படும் அளவில் அவர்களின் பிறப்பு அமையும்.
குதிரையாக பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
தன்னுடைய சுய லாபத்திற்காக பொருள் சேர்க்கும் பேராசையால், சிறு வயது குழந்தைகளை பணியில் அமர்த்தி அவர்களை அடித்து துன்புறுத்தி அவர்களிடமிருந்து வேலையினை பெற்று பொருள் சேர்க்கக்கூடியவர்கள் அடுத்தடுத்த பிறப்புகளில் குதிரைகளாக பிறந்து நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருப்பார்கள். சிறு குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கக்கூடிய பெற்றோர்களும், அதற்கு உடந்தையாக இருப்பவர்களும் குதிரைகளாக பிறப்பார்கள். வறுமையின் காரணமாக தன்னிடம் வந்து இருக்கும் குழந்தைகளிடம் அதிக வேலைகளை வாங்கிக்கொண்டு வேலைக்கு உண்டான ஊதியம் கொடுக்காமல் ஏமாற்றக்கூடியவர்கள் அடுத்தடுத்து எடுக்கும் பிறப்புகளில் நோயுள்ள மற்றும் துன்பத்தை அனுபவிக்கக்கூடிய நிலையில் இருக்கும் இடத்தில் குதிரைகளாக பிறந்து தன்னுடைய பாவத்தை குறைத்துக் கொள்வார்கள்.
ரோகம் உடையவர்கள் யார்?
பொருள் செல்வத்தில் தன்னைவிட தாழ்ந்த நிலையில் இருக்கக்கூடிய சுமங்கலிப் பெண்களையும், கன்னிப் பெண்களையும் சுபகாரியம் போன்ற நிகழ்ச்சிகளில் வரவேற்று அவர்களுக்கு உரிய மரியாதையும், மதிப்பும் அளிக்காமல் அனைவரையும் உதாசீனப்படுத்தக்கூடியவர்களின் தலைமுறையானது பலவிதமான இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகும். மேலும் அந்த குலத்தை சேர்ந்த பெண்மணிகள் ரோகத்தினால் துன்பத்தை அனுபவிப்பார்கள்.
கருட புராணம்...!!
ஒரு மன்வந்தர காலம் வாயுலோகத்தில் வாழக்கூடியவர்கள் யார்?
இறைவனுக்கு தேவைப்படுகின்ற அல்லது பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய மலர்கள் இருக்கக்கூடிய நந்தவனத்தினை திருத்தலங்களுக்கு அளிக்கின்றவர்கள் ஒரு மன்வந்தர காலம் முழுவதும் இறந்த பின்பு வாயுலோகத்தில் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
வெண்சாமரம் தானமாக கொடுக்கக்கூடியவர்கள் பத்தாயிரம் ஆண்டுகள் வாயுலோகத்தில் சுகமாக இருப்பார்கள்.
அறிவாளியாக பிறக்கக்கூடியவர்கள் யார்?
சான்றோர் மக்களுக்கும், ஞானம் உணர்ந்தவர்களுக்கும் நவரத்தினங்களை தானமாக கொடுக்கக்கூடியவர்கள் மறு ஜென்மத்தில் அறிவாளியாக பிறப்பார்கள். தானம் கொடுக்கும் பொழுது தானம் கொடுப்பவரின் தன்மைகளை அறிந்து தானம் கொடுப்பது மென்மேலும் சிறப்பை ஏற்படுத்தும்.
உடலும், ஆன்மாவும் இணைந்த நிலையில் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் தனக்கு போக மீதி இருக்கக்கூடிய தானியங்களை இயலாதவர்களுக்கும், துன்பத்தில் இருப்பவர்களுக்கும் எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் தானமாக கொடுக்கக்கூடியவர்கள் செய்த புண்ணியத்தின் விளைவாக மறுஜென்மத்தில் தீர்க்க ஆயுள் உடையவர்களாக பிறப்பார்கள்.
நவரத்தினத்தையும், தானியத்தையும் தானமாக பெற்றவர்கள் முறையான வழிகளில் தான பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் வைகுண்டம் அடைவார்கள். ஒருவேளை தானமாக கிடைக்கும் பொருட்களை தவறான கண்ணோட்டத்துடனும் அல்லது தவறான செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவதினால் பலவிதமான இன்னல்களுக்கு உள்ளாவார்கள்.
பிரம்மலோகத்தில் வாழக்கூடியவர்கள் யார்?
எந்தவொரு பொருளையும் தன்னுடைய சுயநலத்திற்காக இல்லாமல் அல்லது பொருளை பெற்றவர் தனக்கு ஏதாவது ஒரு வகையில் பெற்ற பொருளுக்கு இணையாக உதவிகளை செய்வார் என்று கருதாமல் அதாவது எந்தவிதமான பலன்களையும் எதிர்பார்க்காமல் தானம் செய்பவர்களின் மரணம் என்பது மிகவும் உன்னதமாக இருக்கும். இவ்விதமாக வாழ்ந்து இறந்தவர்களுக்கு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை. அவர்கள் பிரம்மலோகத்தை அடைந்து இன்பமாக வாழ்வார்கள்.
தன்னுடன் இருப்பவர்கள் மற்றும் தன்னை சார்ந்து இல்லாதவர்களுக்கும் நன்மை செய்யக்கூடிய செயல்களை விரும்பி செய்கின்றவர்கள் சூரியலோகத்தை அடைந்து இன்பமாக வாழ்வார்கள்.
வாழும் காலத்தில் கிடைக்கும் பொருள் செல்வத்தை சேர்த்து தன்னுடைய செல்வ மதிப்பினை மட்டும் அதிகரித்து கொள்ளாமல் நற்பலன்கள் மற்றும் நற்கர்மங்களை அதிகரிக்கும் நோக்கத்தோடு தீர்த்த யாத்திரைகளை மேற்கொள்ளக்கூடியவர்களும், தீர்த்த யாத்திரையிலும் தேவையற்ற செயல்களை செய்யாமல் அறம் தொடர்பான செயல்களை செய்கின்றவர்கள் இறந்த பின்பு சத்தியலோகத்தில் வாழ்வார்கள்.
குபேரலோகத்தில் வாழக்கூடியவர்கள் யார்?
மானிட பிறப்புகளில் திருமணம் என்பது எவ்வளவு முக்கியமானதோ அதேபோல அவர்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் அவர்களின் வாழ்க்கையிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும். அவர்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளை நல்ல ஒழுக்கத்துடனும், பண்புடனும் வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.
தனக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளில் ஆணாயினும், பெண்ணாயினும் அவர்களை ஒழுக்கநெறியுடன் வளர்த்து திருமணம் செய்து வைப்பவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள் ஆவார்கள். அதிலும் பெண் பிள்ளைகளை ஈன்றெடுத்து அவர்களை நன்முறையில் வளர்த்து கன்னிகாதானம் செய்து கொடுக்கக்கூடியவர்கள் 14 இந்திர ஆயுள் காலம் வரை அமராவதியில் சுகமாக லயித்து இருப்பார்கள்.
தன்னைவிட செல்வத்தில் குறைவாக இருக்கக்கூடிய மற்றும் தன்னை சார்ந்து இருக்கக்கூடியவர்கள், பெண் குழந்தைகளின் திருமணத்திற்கு தேவையான உதவிகளையும் அல்லது வெள்ளி பொருட்களையும் எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல் தானமாக கொடுக்கக்கூடியவர்கள் குபேரலோகத்தில் ஒரு மன்வந்தர காலம் வரை வாழ்வார்கள்.
அவரவர்களின் வசதிக்கேற்ப தானங்கள் கொடுப்பது அவரவர்கள் இறந்தபின்பு வாழ்கின்ற லோகத்தை அவர்களாகவே தேர்ந்து எடுத்து கொள்கின்றார்கள். அதாவது தாமிரம் மற்றும் நெய் போன்றவற்றை தானமாக கொடுக்கின்றவர்கள் சந்திரலோகத்தில் வாசம் செய்வார்கள்.
ஜனலோகத்தில் வாழக்கூடியவர்கள் யார்?
துன்பப்படும் வேளையில் சக மனிதர்கள் என்பதில் எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல் பண உதவிகளையும், பொருள் உதவிகளையும் செய்கின்றவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழக்கூடியவர்கள் ஆவார்கள்.
பல உயிரினங்களுக்கு தேவையான வாழ்வாதாரமான நீர் நிலையத்தை உருவாக்குகின்றவர்களும் அல்லது பாழடைந்த நிலையில் உள்ள நீர்நிலைகளை சீர்திருத்தம் செய்யக்கூடியவர்களும் இறந்த பின்பு ஜனலோகத்தில் நீண்ட காலம் சுகமாக லயித்து இருப்பார்கள்.
வைகுண்டத்தில் வாழக்கூடியவர்கள் யார்?
மனித இனத்திற்கு மட்டும் பயன்படாமல் மற்ற இனத்தை சார்ந்த உயிரினங்களுக்கும் பயன்படும் நோக்கத்தோடு வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய பல பயனுள்ள மரங்களை நடுகின்றவர்களும் அல்லது வளர்ந்த மரங்களை பாதுகாக்கக்கூடியவர்களும் தபோ லோகத்தை அடைந்து வாழ்வார்கள்.
மலர்கள் பூத்து குலுங்குகின்ற பூந்தோட்டத்தை தானமாக கொடுக்கக்கூடியவர்கள் இறந்த பின்பு 16 ஆண்டுகள் துருவலோகத்தில் சுகமாக லயித்திருப்பார்கள்.
திருத்தலங்களில் விமானம் அமைக்கக்கூடிய பொருள் செலவினை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் வைகுண்டத்தில் ஒரு மன்வந்திரம் காலம் வரை வாழ்வார்கள்.
புராண நிகழ்வுகளை குறிக்கக்கூடிய சிற்பங்களை உடைய கோபுரங்களை உருவாக்குவதற்கு தேவைப்படக்கூடிய பொருள் செல்வங்களை அளிக்கக்கூடியவர்கள் 64 ஆண்டுகள் பரமபதத்தில் இருப்பார்கள்.
(பரமபதம் என்பது நிரந்தரமான ஒன்றாகும். ஒருமுறை அதை அடைந்துவிட்டால் அதை இழப்பது என்பது இயலாத ஒன்றாகும்.)
சிவிகையை தானமாக கொடுப்பதன் மூலம் 8 ஆண்டுகளும், டோலியை தானம் செய்வதன் மூலம் நூறு மன்வந்திரமும், பரமபதவாசலும் கிடைக்கும்.
இறைவன் பவனி வரக்கூடிய வீதிகளை செம்மைப்படுத்தக்கூடியவர்களும், அதை சீர் செய்யக்கூடியவர்களும் பத்தாயிரம் ஆண்டுகள் இந்திரலோகத்தில் சுகமாக இருப்பார்கள்.
தவத்திலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கக்கூடிய ஞானியர்களின் தரிசனமும், ஆசீர்வாதங்களும், ஸ்பரிசமும் பாவத்தை அழிக்கும் சக்திகள் உடையதாகும்.
பௌர்ணமியில் டோலோற்சவம் என்ற ஊஞ்சல் உற்சவம் செய்யக்கூடியவர்கள் இப்பிறவியிலும், எடுக்க போகின்ற அடுத்தடுத்த பிறவிகளிலும் இன்பத்தை அடைவார்கள். இந்த உற்சவத்தை பங்குனி உத்திரத்தன்று நடத்தக்கூடியவர்கள் 200 ஆண்டுகள் வைகுண்ட வாசத்தை அனுபவிப்பார்கள்.
ஆன்மாவின் சுகம் எங்கு நிறைந்திருக்கின்றது?
இறந்த பின்பு உடலற்ற ஆன்மாவானது அனுபவிக்கின்ற அனைத்து இன்பங்களும், உடலுடன் கூடிய ஆன்மாவுடன் பொருள் செல்வத்தை சேகரித்து வளப்படுத்தி கொள்ளக்கூடிய வாழ்க்கையில் செய்கின்ற செயல்களின் அடிப்படையில் ஆன்மாவின் சுகமானது நிறைந்திருக்கின்றது.
கைலாயத்தில் வாழக்கூடியவர்கள் யார்?
உடலுடன் கூடிய ஆன்மா வசிக்கும் உலகில் பொருள் இருப்பவர்களுக்கு மட்டுமே அனைத்து சுகங்களும் கிடைக்கின்றது. ஆனால், இங்கு சுகமாக இருந்த ஆன்மா, இறந்த பின்பு எண்ணற்ற வேதனைகளையும், துன்பங்களையும், எமலோக பயணத்திலும், எம புறத்திலும் அனுபவித்து கொண்டிருக்கின்றது.
அரிதிலும் அரிதான மானிடப் பிறப்பு கிடைத்தும் அதை எதற்காக பிறந்திருக்கிறோம்? என்பதை உணராமல் அற்ப சுகத்திற்காக பாவங்களை மென்மேலும் செய்து, மீண்டும் இந்த உலகில் மாறுபட்ட ஒரு உயிரினங்களாக பிறந்து தன்னுடைய பாவங்களை கழித்து கொண்டே இருக்கின்றார்கள் பகுத்தறிந்து உணரும் பலர்.
தன்னுடைய சக்திக்கு முடிந்தளவு தானங்கள் கொடுப்பது அவர்களின் இம்மைக்கும், மறுமைக்கும் நன்மையளிக்கும். தானம் கொடுப்பது என்பது கட்டாயமானது அல்ல. முடியாதவர்களுக்கு அவர்கள் துன்பப்படும் வேளையில் தேவையான உதவிகளை எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல் செய்வது உத்தமமாகும்.
தாமிரத்தாலான பாத்திரங்களில் எள்ளை நிரப்பி தானம் கொடுப்பவர், ஒரு எள்ளுக்கு ஒரு வருடம் வீதம் கைலாயத்தில் வாழ்வார்கள். அவர்கள் செய்த இந்த நற்செயலின் பயனாக நல்லதொரு குளத்தில் பிறந்து திடகாத்திரமாகவும், ஆயுளுடனும், கீர்த்தியுடனும் வாழ்ந்து அனைவரிடத்திலும் பாராட்டுக்களை பெறக்கூடியவர்களாக இருப்பார்கள்.
தானம் கொடுப்பது சிறிய பொருட்களாக இருந்தாலும் அதை கொடுக்கக்கூடிய மனமானது பெரிதாக இருந்தால் முழு பலனையும் அடைய இயலும்.
தாகத்தில் வருகின்ற நல்லவர்களுக்கு ஒரு சொம்பு அளவு தண்ணீரை தானமாக கொடுத்தால் கைலாயத்தில் அவர்களுக்கான இடம் காத்திருக்கும்.
கந்தர்வலோகத்தில் வாழக்கூடியவர்கள் யார்?
உண்பதற்கு சுவையான பழங்களை கொடுக்கக்கூடியவர்கள் ஒரு பழத்திற்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வலோகத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். செய்த புண்ணியத்தின் அளவு மிகுந்து இருந்தால் அவர்கள் எடுக்கும் மறுபிறவியில் குணமுள்ள, பண்புள்ள இல்லாளும், சற்புத்திரர்களும் பெற்று தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.
வைகுண்ட வாசம் பெறக்கூடியவர்கள் யார்?
கார்த்திகை மாதத்தில் துலா தானம் செய்யக்கூடியவர்கள் 3 யுகங்கள் வரை வைகுண்டத்தில் வாழ்வார்கள்.
ஆதவன் உதிக்கையில் கங்கையில் நீராடக்கூடியவர்கள் 60,000 ஆண்டுகள் பரமபதத்தில் இருப்பார்கள்.
சாலி கிராமத்தை மிகுந்த ஆதாரத்தோடு பூஜித்து அதன் தீர்த்தங்களை அருந்தக்கூடியவர்கள் வைகுண்டத்தில் நூறு ஆண்டுகள் வாழ்ந்து பூவுலகில் செல்வந்தர்களாகவும், வல்லவர்களாகவும் மேன்மையுடன் வாழ்வார்கள்.
விரதத்தையும், நோன்பையும் பக்தியுடன் கடைபிடிக்கக்கூடியவர்கள் 14 இந்திர காலம் வரை சொர்க்கத்தில் வாழ்வார்கள்.
சுதர்சன ஹோமமும், தன்வந்திரி ஹோமமும் செய்யக்கூடியவர்கள் ஆரோக்கியமானவர்களாகவும், எதிரிகள் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். ஒருவேளை எதிரிகள் இருந்தால் அவர்களை நிர்மூலம் செய்யக்கூடியவர்களாகவும், தீர்க்க ஆயுளுடனும் வாழ்வார்கள் என்று ஸ்ரீமந் நாராயணன் கருடாழ்வாரிடம் கூறினார்.
கருடாழ்வார் ஸ்ரீமந் நாராயணனை நோக்கி இறப்பு, பிறப்புகளில் இருந்த அனைத்து சந்தேகங்களும் என்னிடமிருந்து விலகின. யாம் வினாவிய அனைத்து வினாவிற்கும் விடையளித்த, உலகத்தை காத்து ரட்சித்து கொண்டிருக்கும் நாராயணனுக்கு மிக்க நன்றிகள் என்று கூறினார்.
நாராயணர், கருடனே! யாம் உனக்கு கூறிய அனைத்து கருத்துக்களும் உம்மால் பிறருக்கு உபதேசிக்கப்பட்டு அந்த கருத்துக்கள் யாவும் உன்னுடைய பெயரிலேயே அழைக்கப்படும். அந்த புராணம் கருட புராணம் என்று வருகின்ற காலங்கள் யாவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஆசியும் அளித்தார்.
எவன் ஒருவன் அவனுடைய தந்தை இறந்து, தீட்டு காலம் முடிவதற்குள் கருட புராணத்தை வாசிப்பதை கேட்கிறார்களோ அவனுடைய தந்தைக்கு மோட்சம் கிடைக்கும். தாய் இறந்த பொழுது கருட புராணத்தை வாசித்தாலோ அல்லது கேட்டாலோ தாய் சொர்க்கத்தை அடைவாள். இதைத்தவிர புண்ணிய காலத்திலும், கிரகண காலத்திலும் இந்த கருட புராணத்தை படித்தாலும், கேட்டாலும் புண்ணியங்கள் பலவற்றை அவன் அனுபவிப்பான்.
பலமுறை தானம் செய்தாலும் கயா கங்கை போன்ற புண்ணிய நதிகளில் சிரார்த்தம் செய்வதால் கிடைக்கக்கூடிய புண்ணியங்களை விட இந்த புராணத்தை மனதளவில் படித்து அதை வாழ்க்கையில் கொண்டு செயல்படுத்தக்கூடியவர்கள் அதிக புண்ணியத்தை அடைவார்கள்.
உலகில் தோன்றி இருக்கக்கூடிய அனைத்து உயிர்களிலும் சிறந்து விளங்கக்கூடிய மனித உயிரினத்தின் பிறப்பின் முக்கியத்துவமும்...
ஏன் மற்ற உயிரினங்களை காட்டிலும் பகுத்தறிந்து உணரும் தன்மை மனித உயிர்களுக்கு மட்டும் மிகுந்து இருக்கின்றன? என்பதற்கான காரணத்தையும்...
பிறப்பின் நோக்கம் யாதென்று அறிந்து கொள்வதற்கான வினாவும், விடையுமாக...
யாம் உமக்கு அளித்து இருக்கக்கூடிய இந்த புராணத்தின் மூலமாக அனைவரும் அறிந்து சொர்க்கத்தினை அடைவதற்கான சூட்சுமங்களை புரிந்து கொள்வதற்கான பொக்கிஷமான கருத்துக்களை தெரிவிப்பதற்காகவே இந்த புராணத்தை யாம் உமக்கு கூறினேன் என்றார் அகில லோகத்தையும் காத்துக் கொண்டே இருக்கக்கூடிய ஸ்ரீமந் நாராயணன்.
மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த கருடன், பகவானை நோக்கி கருணையின் கடலே! கருணாமூர்த்தியே! என்னுள் இருந்த கேள்விகளையும் நீரே எழுப்பி, அதற்கான பதில்களையும் உரைத்து, என்னுள் ஏற்பட்ட பல ஐயங்களையும், சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
நான் மாபெரும் பாக்கியசாலி. தங்களின் திருவாயால் இவ்வளவு புண்ணியம் நிறைந்த புராணத்தை கேட்க எத்தனை பிறவிகளில் என்ன தவம் செய்தேனோ? என்று உரைத்த வண்ணமாக கருடன், ஆதிசேஷனின் மீது வீற்றிக்கும், உலகை காத்து ரட்சித்து கொண்டிருக்கக்கூடிய திருமகளுடன் வாசம் செய்து உலக உயிர்களுள் ஒன்றாய் திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நாராயணரை வலம் வந்து வணங்கி மகிழ்ந்தார்.
இவ்விதமாக ஸ்ரீமந் நாராயணன் கருடாழ்வாருக்கு உபதேசித்த அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வகை பொருட்களை பற்றி விளக்கக்கூடிய புராணத்தை முனிவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கூறி முடித்தார் சூதமா முனிவர். சூதமா முனிவர் கருட புராணத்தின் மகிமையும் ஸ்ரீமந் நாராயணன் எடுத்துரைத்த விதத்தையும் கேட்டிருந்த நைமிசாரண்யத்தில் வாழ்ந்து கொண்டிருந்த முனிவர்கள் பகவான் நாமங்களை போற்றி பாடி மகிழ்ந்தார்கள்.
கருட புராணம்...!!
ஈயாகவும், தேனியாகவும் பிறக்கக்கூடியவர்கள் யார்?
வனங்களில் பல்வேறு பூக்களில் இருந்து தேனை சேகரித்து தேன் கூட்டினை அமைத்திருக்கும் தேனீக்களை கொன்று தேன் எடுப்பவர்கள் பல பிறவிகளில் தேனியாக பிறப்பார்கள். மேலும் செய்த பாவத்தின் காரணமாக தேனியாக மட்டுமில்லாமல் ஈயாகவும் பிறப்பார்கள்.
நீர்நிலை பிராணிகளாக பிறக்கக்கூடியவர்கள் யார்?
நீர்நிலைகளை அசுத்தம் செய்யக்கூடியவர்கள் அடுத்த பிறவியில் நீர்நிலையங்களில் பிராணிகளாக பலகாலம் வாழ வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும்.
ஆமையாக பிறக்கக்கூடியவர்கள் யார்?
தன்னை விட கீழ்நிலையில் இருக்கக்கூடியவர்களின் ஏழ்மை நிலையினை பயன்படுத்தி கொண்டு செய்யாத குற்றத்தை அவர்கள் மேல் சுமத்தி அவர்களின் மதிப்பினை இழக்க செய்யக்கூடியவர்கள் அடுத்த பிறப்புகளில் ஆமையாக பிறப்பார்கள்.
எட்டி மரமாக பிறக்கக்கூடியவர்கள் யார்?
காய் கனிகளுடன் பூவும், பிஞ்சுமாக இருக்கக்கூடிய மரங்களை தன்னுடைய சுயலாபத்திற்காக வெட்டி சுகமாக வாழ்ந்தவர்கள் அடுத்த பிறப்புகளில் எட்டி மரமாக பிறந்து நீண்டகாலம் வாழ்ந்து செய்த தவறுக்கு உண்டான பலனை அனுபவிப்பார்கள்.
முதலையாக பிறக்கக்கூடியவர்கள் யார்?
புண்ணிய தீர்த்தங்களில் வழிபட சென்றவர்கள், அங்கு இருக்கும் கன்னியர்களை காம எண்ணத்தோடு பார்க்கக்கூடியவர்கள் அடுத்தடுத்த பிறப்புகளில் முதலையாக பிறப்பார்கள்.
வெள்ளை நிற பறவைகளாக பிறக்கக்கூடியவர்கள் யார்?
வெண்மை நிற உணவு பொருட்களான பால், தயிர் முதலியவற்றை திருடக்கூடியவர்களுக்கும், அதில் கலப்படம் செய்யக்கூடியவர்களுக்கும், வேதம் உணர்ந்தவர்கள் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கக்கூடியவர்களின் பொன்னையும், பொருளையும் திருடக்கூடியவர்களுக்கும், உடைகளை களவாடுபவர்களுக்கும் உடலில் வெள்ளை நோய் உருவாகும். அவர்கள் இறந்து மறுபிறவி எடுக்கும் பொழுது புறா மற்றும் கொக்குகள் போன்ற வெள்ளை நிற பறவைகளாக பிறப்பார்கள்.
ஒட்டி பிறக்கக்கூடியவர்கள் யார்?
பலவிதமான இன்னல்களுக்கு ஆட்பட்டு தான் சேர்த்த செல்வத்தை கொண்டு சிறு அளவிலான வெள்ளி மற்றும் வெண்கல பாத்திரங்களை வைத்திருப்பவர்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பொருட்களை அபகரித்தவர்கள் சூலை நோயினால் பாதிக்கப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு கை, கால்களில் விரல்கள் அதிகமாக இருக்கும். ஏழ்மையில் இருக்கக்கூடியவர்களுடைய பொருட்களை கூட்டாளிகளுடன் சேர்ந்து அபகரிப்பவர்கள் இறந்த பின்பு அடுத்த பிறவியில் ஒட்டி பிறப்பார்கள்.
எருமையாக பிறக்கக்கூடியவர்கள் யார்?
உடல் வலிமை இருந்தும் அந்த வலிமையை தவறான வழிமுறைகளில் பயன்படுத்தி பெண்களை தவறான வழிக்கு கொண்டு சென்று அவர்களின் உழைப்பில் அதாவது, விபச்சாரியின் உழைப்பில் வருகின்ற பணத்தின் மூலம் வாழ்கின்றவர்கள் அடுத்தடுத்த பிறப்புகளில் பார்வையற்றவர்களாகவோ அல்லது கண் நோயினால் பாதிக்கப்படக்கூடியவர்களாக பிறப்பார்கள். தன்னை நம்பி இருப்பவர்களின் உழைப்பில் வாழ்ந்து அந்த உழைப்புக்கு உண்டான ஊதியம் கொடுக்காமல் தான் மட்டும் எப்பொழுதும் சுகமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் செய்த பாவத்தின் அளவிற்கு ஏற்ப ஆடுகளாகவும், எருமைகளாகவும் பிறவிகள் எடுப்பார்கள்.
சிறு வயதில் மரணம் அடையக்கூடியவர்கள் யார்?
தன்னை நம்பி வந்திருந்த வாழ்க்கைத்துணையை தவிக்க வைத்து விட்டு அல்லது அவர்களை விடுத்து மற்ற அந்நியப் பெண்களிடம் சேர்ந்தவர்கள் அடுத்த பிறவிகளில் சிறு வயதில் மரணத்தை அடைவார்கள்.
இழிவான பிறவியாக பிறக்கக்கூடியவர்கள் யார்?
நல்ல குணமும், சிந்தனையும் கொண்டிருக்கக்கூடிய பெண்களின் மீது ஆசைப்பட்டு அவர்களை தன்னுடைய இச்சைக்கு பயன்படுத்தி கொள்ளக்கூடியவர்கள் எவரும் விரும்பத்தகாத வகையில் அருவருக்கும் தோற்றத்துடன் செய்த பாவத்தின் அளவிற்கு ஏற்ப எவர் கண்ணிலும் அகப்படாமல் இழிவான பிறவியாக பிறப்பார்கள்.
பிசாசாக பிறக்கக்கூடியவர்கள் யார்?
பொய்யான ஆன்மிக சிந்தனை கொண்டவராக உருவம் தரித்து, ஆசிரமம் அமைத்து வாழ்பவர்கள் நல்ல முறையில் வாழ்பவனின் மனைவியின் மீது இச்சை கொண்டு அவர்களுடன் கூடியவர்கள் இறந்த பின்பு மோட்ச நிலைக்கும் செல்ல இயலாமல், பிறவியும் எடுக்க இயலாமல் அலைந்து திரிந்து கொண்டே இருக்கக்கூடிய பிசாசாக மாறுவார்கள். செய்கின்ற பாவத்தின் அளவிற்கேற்ப அலைந்து கொண்டிருக்கும் காலமும் இருக்கும்.
காசநோய் யார் யாருக்கெல்லாம் ஏற்படும்?
வேள்வி நடத்துவதற்கு என்று பொருள் செல்வங்கள் கொடுத்தும், அந்தப் பொருள் செல்வங்களை சரியான முறையில் வேள்விக்கு உண்டான பொருட்களை வாங்காமல், தரம் குறைவான பொருட்களை வேள்விக்கு வாங்கி பயன்படுத்துவதும் அல்லது வேள்விக்கு உண்டான பொருளை வேள்விக்கு பயன்படுத்தாமல் பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்திவிட்டோம் என்று கூறி அந்த பொருளை எடுத்துச் செல்பவர்கள் குரங்கு ஜென்மங்களாக பிறப்பார்கள். மேலும் செய்த பாவம் குறைவாக இருக்கும் பட்சத்தில் மானுடனாக பிறக்கும் சூழ்நிலை அமைந்தால் அவர்களுக்கு காசநோய் ஏற்படும்.
திருமணம் யாருக்கெல்லாம் நடைபெறாது?
மனிதர்களின் வாழ்க்கையில் திருமணம் என்பது அவர்களின் தலைமுறையை வெளிப்படுத்துவதும், அவர்களின் வாழ்க்கையில் ஒரு துணையை உருவாக்கிக் கொள்வதற்கான புதிய அத்தியாயமும் ஆகும். ஒருவர் பிறக்கும் பொழுது வளர்ந்து, திருமண பருவத்தை அடைந்ததும் திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்கள் சென்ற பிறவிகளில் இறைச்சியை அறுத்து விற்றவர்கள் ஆவார்கள். ஒருவேளை ஏதோ புண்ணியத்தினால் திருமணம் நடக்கும் பட்சத்தில் அந்த திருமண வாழ்க்கையில் பலவிதமான இன்னல்களையும், துன்பத்தையும் அவர்கள் அனுபவிப்பார்கள். எதற்காக திருமணம் செய்து கொள்கின்றோம்? என்று சிந்திக்கும் அளவிற்கு அந்த திருமண வாழ்க்கை அவர்களுக்கு இருக்கும். இவ்விதமாக உயிரினங்களை கொன்று அதன் இறைச்சியை விற்றவர்கள் செய்த பாவத்தை கழிக்க மயிலாக பிறப்பெடுத்து தனது பாவத்தை போக்கிக் கொள்வார்கள்.
பெருச்சாளியாக பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
எண்ணெயில் செய்யப்படுகின்ற உணவு பொருட்களில் கலப்படம் செய்யக்கூடியவர்கள் மூஞ்சூறாகவும், பெருச்சாளியாகவும் பிறப்பார்கள். இதற்கு அடுத்த பிறப்பாக கஸ்தூரிமானாகவும், பூனையாகவும் பிறப்பார்கள்.
எலியாக பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
ஒருவர் தன்னுடைய பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்வதற்காக வாங்கி வந்திருக்கும் நெய்யை பயன்படுத்தாமல் அந்த நெய்யை தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப எடுத்து செல்லக்கூடியவர்கள் அல்லது சிரார்த்தத்திற்கு பயன்படுத்திய நெய்யை திருடக்கூடியவர்களும் எலியாக பிறப்பார்கள்.
நூறு பிறவிகள் பிறப்பெடுக்கக்கூடியவர்கள் யார்?
அற்ப சுகத்தை அளிக்கக்கூடிய பணத்திற்காக தனக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாதவர்களை கொலை செய்யக்கூடியவர்கள் நூறு பிறவிகள் பூனையாகவும், நரியாகவும், கரடியாகவும், செந்நாயாகவும் மற்றும் அரணையாகவும் பிறப்பார்கள்.
யானையாக பிறக்கக்கூடியவர்கள் யார்?
சாஸ்திரங்களையும், வேதங்களையும், பூஜை புனஸ்காரங்களையும் இகழ்ந்து பேசக்கூடியவர்கள் இறந்த பின்பு யானையாக பிறப்பார்கள். அவ்விதம் பிறப்பெடுத்த யானைகள் மனிதர்களிடம் பிடிபட்டு துன்பத்தை அனுபவிக்கும். சிறிதளவு ஏதேனும் புண்ணியம் செய்திருந்தால் திருத்தலங்களில் சேவை செய்யக்கூடிய யானையாக பாக்கியம் கிடைக்கும்.
வைதரணி நதியில் தண்டனைகளை அனுபவிக்கக்கூடியவர்கள் யார் யார்?
எமபுரிக்கு செல்லும் வழியில் வைதரணி நதி இருப்பதை பற்றியும், அதில் என்ன இருக்கின்றது? என்பதை பற்றியும் யான் உனக்கு முன்பே உரைத்துள்ளேன். இப்பொழுது பாவம் செய்தவர்கள் எவ்விதம் வைதரணி நதியில் விழுந்து அவதிப்படுவார்கள்? என்பதை கூறுகிறேன் என்று கருடாழ்வாருக்கு நாராயணன் எடுத்துரைத்தார். அதாவது, பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது தான் என்ற அகந்தையுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும், தன்னை ஈன்றெடுத்த பெற்றோர்களை கவனிக்காமல் அவர்களின் மனதினை புண்படுத்தக்கூடியவர்களும், தனக்கு உலக வாழ்க்கையை புரிய வைத்த ஆசிரிய பெருமக்களை அவமதித்தவர்களும் எமபுரிக்கு செல்லும் வழியில் உள்ள வைதரணி நதியில் விழுந்து துன்பத்தை அனுபவிப்பார்கள்.
மேலும், தன்னை நேசித்தவர்களுக்கு துரோகம் இழைத்தவர்களும், வாழ்வதற்கு பலவகைகளில் உதவியாக இருந்தவர்களை ஏமாற்றி அவர்களுக்கு தீங்கு செய்தவர்களும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் பலவிதமான துன்பங்களை இழைத்தவர்களும், சுபகாரிய செயல்களை செய்ய தடையாக இருந்தவர்கள் தன்னால் தானம் கொடுக்க முடியவில்லை என்றாலும் மற்றவர்கள் கொடுக்கக்கூடிய தானத்தை தடுக்கின்றவர்களும், வாக்குறுதிகளை அளித்து அதை நிறைவேற்றாமல் ஏமாற்றக்கூடியவர்களும் எமபுரிக்கு செல்லும் வழியில் உள்ள வைதரணி நதியில் விழுந்து துன்பத்தை அனுபவிப்பார்கள்.
எந்தவிதமான ஆதாரமும் இன்றி கூறிய கருத்துக்களில் இருக்கக்கூடிய உண்மைப் பொருளை உணராமல் மதங்களைப் பற்றி தவறான கருத்துக்களை கூறுகின்றவர்களும், திருமணக்கோலத்தில் இருக்கக்கூடிய பதுமையின் மீது தேவையற்ற பலி சுமைகளை சுமத்தி களங்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்களும், தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தேவையான பொருட்கள் கிடைக்கும் வகையில் சலுகை செய்யக்கூடியவர்களும், தனக்கு வேண்டாதவர்களுக்கு கிடைக்க இருக்கக்கூடிய பொருட்களை கிடைக்கவிடாமல் தடுக்கக்கூடியவர்களும், எப்பொழுதும் மற்றவர்கள் மீது கோபத்துடன் நிந்தனை செய்யக்கூடியவர்களும் எமபுரிக்கு செல்லும் வழியில் உள்ள வைதரணி நதியில் விழுந்து துன்பத்தை அனுபவிப்பார்கள்.
மேலும் அங்குள்ள அகோரத் தோற்றம் கொண்ட விலங்குகள் மூலமும் சொல்ல முடியாத அளவில் இன்னல்களை அனுபவிப்பார்கள். பிறவிகள் என்பது அவரவர்கள் செய்கின்ற நல்ல மற்றும் தீய கர்மங்களின் அடிப்படையில் நிர்ணயம் ஆகின்றன என்று ஸ்ரீமந்நாராயணர் கருடாழ்வாருக்கு எடுத்துரைத்தார். ஸ்ரீமந்நாராயணன் இவ்விதமாக கூறிக் கொண்டிருந்த பொழுது கருடாழ்வாருக்கு ஒருவர் நல்வினைகளை செய்து இருந்தால் அவர்கள் எப்படிப்பட்ட பிறப்புகளை எடுப்பார்கள்? என்பது குறித்து ஐயம் தோன்ற அதை ஸ்ரீமந்நாராயணனிடம் வினவினார். ஸ்ரீமந்நாராயணரும் நல்ல கர்மங்களை செய்யக்கூடியவர்கள் எவ்விதமான பிறப்புகளை எடுப்பார்கள்? என்பது பற்றி கூற துவங்கினார்.
விரும்பிய உலகத்தில் வாழக்கூடியவர்கள் யார்?
தானத்தில் சிறந்தது என்பது அன்னதானம் ஆகும். ஏனெனில் மற்ற எந்த செல்வங்களிலும் ஒருவர் திருப்தி அடைவது என்பது இயலாத ஒன்றாகும். ஆனால் அன்னத்தில் மட்டுமே முழுமையாக திருப்தி அடைவார்கள். அதனாலேயே தானத்தில் சிறந்தது என்பது அன்னதானம் ஆகும். அப்படிப்பட்ட தானத்தை எவர் ஒருவர் வாழும் காலத்தில் செய்துகொண்டு இருக்கின்றாரோ அந்த தானத்தில் உள்ள பருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதாவது, ஒரு பருக்கைக்கு ஒரு வருடம் என்ற விதத்தில் விரும்பிய உலகத்தில் வாழ்வார்கள்.
ஒருவர் பசியோடு இருக்கும் பொழுது அவருக்கு வேண்டிய உணவை அளிப்பது வேறு எந்த தானத்திற்கும் ஈடு இணையாகாது. அன்னதானத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர், நல்லவர், கெட்டவர் என்ற எந்தவிதமான பேதமும், வேறுபாடும் கிடையாது. அன்னதானத்தை இந்த நேரத்தில் தான் செய்ய வேண்டும் என்ற கால நிர்ணயமும் கிடையாது. எந்த நேரத்திலும் அன்னதானத்தினை எவர் வேண்டுமாயினும் அவரவர்களின் வசதிக்கு ஏற்ப செய்து கொள்ள முடியும்.
கோ லோகத்தில் வாழக்கூடியவர்கள் யார்?
வாழும் பொழுது தன்னுடைய வசதிக்கு ஏற்ப கோ தானத்தை செய்கின்றவர்கள் இறந்த பின்பு கோ லோகத்தை அடைவார்கள். பசுவானது கன்று ஈனும் சமயத்தில் தானத்தை செய்தவருக்கே வைகுண்ட வாசம் கிடைக்கும்.
லோகமும்.. வாழக்கூடியவர்களும்.. :
குடை தானத்தை செய்கின்றவர்கள் ஆயிரம் ஆண்டுகள் வருண லோகத்தில் இறந்த பின்பு வாழ்வார்கள். பனியிலும், குளிரிலும் கிடந்து துன்பப்படுபவர்களுக்கு தேவையான ஜமக்காளம், பாய், தலையணை முதலியவற்றை கொடுக்கக்கூடியவர்கள் சந்திர லோகத்தை அடைந்து சுகங்களை அனுபவிப்பார்கள். மற்றவர்களுக்கு தேவைப்படக்கூடிய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கக்கூடிய ஒருவரின் மானத்தையும், மரியாதையும் காப்பாற்றக்கூடிய உடையை தானமாக அளிக்கக்கூடியவர்கள் பத்தாயிரம் ஆண்டுகள் வாயு லோகத்தில் வாழ்வார்கள். பிறவிகளின் அரிய பிறப்பான மானிடப் பிறப்பெடுத்து தன்னால் முடிந்த அளவு நல்ல கருமங்களை மட்டும் செய்து இருக்கக்கூடியவர்கள் இறந்த பின்பு சொர்க்க லோகத்தை அடைவார்கள். அதன் பின்பு நல்ல குணம் உள்ள உயர்ந்த குலத்தில் பிறந்து சிறப்புடன் வாழ்வார்கள்.
இந்திரனுக்கு இணையாக இருக்கக்கூடியவர்கள் யார்?
பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் ஆலய பணிகளுக்காக யானைகளை தானம் அளிக்கக்கூடியவர்கள். இந்த தானத்தின் பலனாக இறந்த பின்பு இந்திரனுக்கு இணையான ஆசனத்தில் அமர்ந்து தேவ மங்கையர்களின் நாட்டியத்தினை ரசித்து கொண்டிருப்பார்கள்.
வருண லோகத்தில் வாழக்கூடியவர்கள் யார்?
வாழ்நாளில் பொருள் செல்வத்தை ஈட்டி அந்த பொருள் செல்வத்தினை சரியான முறைகளில் செலவழிக்காமல் தனக்கு விருப்பம் போல் செலவழித்து, நல்ல கர்மங்களில் உண்டாகும் இன்பத்தை அனுபவிக்காமல் அற்ப இன்பங்களை அனுபவிப்பவர்கள், இறந்த பின்பு பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.
ஒருவேளை தன்னிடம் பொருள் செல்வங்கள் மிகுதியாக இருக்கும்பட்சத்தில் திருத்தலங்களுக்கு தேவையான குதிரைகளையும், பல்லாக்குகளையும் கோவிலுக்கு கொடுக்கக்கூடியவர்கள், 14 இந்திரன் காலம் வரை வருண லோகத்தில் வாழ்ந்து, பூமியில் உடலுடன் ஆன்மா இருக்கும்போது அனுபவிக்கக்கூடிய அற்ப சுகங்களை விட மிகுதியான மட்டற்ற மகிழ்ச்சியான சுகபோகங்களை உடலற்ற நிலையில் யாருக்கும் எந்த விதமான தீய செயல்களை இழைக்காமல் அனுபவிப்பார்கள்.
Thanks and regards
A s Govinda rajan
17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai
7358228278