tamilnadu epaper

21 நாட்கள் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு

21 நாட்கள் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்  வழிபாடு

நீண்ட நாட்களாக அடமானத்தில் இருக்கும் தங்க நகையை திருப்ப இயலவில்லையா? 21 நாட்கள் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை இந்த முறையில் வழிபாடு செய்து பாருங்கள். அடமானத்தில் இருக்கும் நகைகள் அனைத்தும் வீடு திரும்பும்.**


எட்டுத்துக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் கால பைரவர் என்று நம் அனைவருக்கும் தெரியும். கால பைரவரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நவகிரகங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் விலகும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் எதிரிகள் தொல்லை முற்றிலும் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. கால பைரவரை எட்டு வகையான பைரவர்கள் ஆக பிரிப்பதுண்டு. அவற்றுள் ஒருவராக திகழ்ந்தவர் தான் ஸ்வர்ண ஆகர்ஷனை பைரவர்.


பொதுவாக வீட்டு பூஜை அறையில் காலபைரவரின் படத்தை வைத்து வணங்க கூடாது என்று கூறுவார்கள். ஆனால் சொர்ண ஆகர்ஷண பைரவரின் திருவுருவப்படத்தை வைத்து வழிபாடு செய்வதன் மூலம் வீட்டில் செல்வநிலை உயரும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரை எந்த முறையில் வழிபாடு செய்தால் அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகளை திருப்ப முடியும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.


அடமானத்தில் இருக்கும் நகையை திருப்ப**


கஷ்டப்பட்டு சேர்த்த நகையை ஏதோ ஒரு காரணத்திற்காக அடமானத்தில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும். அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கும் அடமானத்தில் இருக்கக்கூடிய நகையை திருப்புவதற்கும் பெரும் முயற்சியை மேற்கொள்வோம். இருப்பினும் அடமானத்தில் இருக்கக்கூடிய நகையை திருப்ப முடியாமல் கஷ்டப்படும் வாய்ப்பும் உண்டாகும். இந்த பிரச்சினையில் இருந்து வெளியே வருவதற்கு நமக்கு சொர்ண ஆகர்ஷண பைரவர் உதவி புரிவார்.


இந்த வழிபாட்டை தேய்பிறை அஷ்டமி நாள், வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் செய்ய ஆரம்பிக்க வேண்டும். தொடர்ச்சியாக 21 நாட்கள் இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டை நாம் இரவு நேரத்தில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. இரவு 7 மணிக்கு மேல் ஆரம்பித்து 11 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம்.


வீட்டில் சொர்ண ஆகர்ஷன பைரவரின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு தரையில் ஒரு விரிப்பை விரித்து அதற்கு மேல் அமர்ந்து என்னென்ன நகைகளை அடமானத்தில் வைத்திருக்கிறோம் என்பதை ஒரு பட்டியலிட்டு எழுதிக் கொள்ள வேண்டும். எழுதிய இந்த பட்டியலை சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு முன்பாக ஏற்றி வைத்திருக்கும் தீபத்திற்கு அடியில் வைத்து விடுங்கள்.


ஒருவேளை அடமானத்தில் வைத்த நகையின் ரசீது இருக்கும் பட்சத்தில் அதைக்கூட நாம் வைக்கலாம். பிறகு அந்த தீபத்தை பார்த்தவாறு சொர்ண ஆகர்ஷன பைரவரின் மந்திரத்தை 21 முறை கூற வேண்டும். பிறகு சொர்ண ஆகர்ஷண பைரவரிடம் அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகள் அனைத்தும் வீடு தேடி வரவேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும்.



**மந்திரம்**


“ஓம் நமோ பகவதே சொர்ண ஆகர்ஷண பைரவாய தன தான்ய விருத்திகராய சீக்ரம் வசியம் குரு குரு ஸ்வாஹா”


தொடர்ச்சியாக 21 நாட்கள் இந்த முறையில் சொர்ண ஆகர்ஷன பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு எவ்வளவு நகைகள் அடமானத்தில் இருந்தாலும் அவற்றை திருப்புவதற்குரிய வாய்ப்புகளும் வருமானமும் வந்து சேரும்


எம் அசோக்ராஜா ________

அரவக்குறிச்சிப்பட்டி _____

திருச்சி __620015___________