tamilnadu epaper

களவாடிய பொழுதுகள்

களவாடிய பொழுதுகள்

ஏதேனுமோர்
மீச்சிறு
இமைப்பொழுதில்
நீ
மொழிபெயர்த்திருக்கலாம்
மௌனத்தாலான
உன்
மனவியலை..

கண்ணகியும்
மாதவியும்
குணம்பிறழ்ந்த
காவியமாய்
புதிராய்
நீயொரு
புத்திபடைத்திருக்கிறாய்..

இன்னதென்று
எவரும்
அறிந்திராதபடி
இருளில்
பதிந்திருக்கிறாய்..

திடுமெனக்கிளம்பி
பேரலையாய்
ஆழிப்பெருங்கடலொன்றில்
திணறடிக்கிறது
உன்
பேரன்பு..

சந்தேகிப்பதற்கிடமில்லாதபடி
உன்
சலனங்கள்
நிறைந்த
இந்த
சிற்றறை
என்மீது
இரவைப்போர்த்தி
ஒரு
அண்டவெளியாகிறது..

விம்மலும்
கேவலுமாக
இந்த
அறையின்
ஜன்னல்கள்
நிஜங்களை
பறைசாற்றும்
தனிமைசூழ்
நீயற்றதோர்
பெருவெளி..

இருந்தும்
உயிர்பூக்கும்
எனக்குள்..

நீ
என்னை
களவாடிய
பொழுதுகள்...!

ம.முத்துக்குமார்
வே.காளியாபுரம்