tamilnadu epaper

காயங்கள்

காயங்கள்

சிறகுகளின் ஈரத்தில் பறவைக்கு
பறந்து செல்வதில் இடர்ப்பாடு

காற்றடித்தால் பொரி விற்பனை
ரொம்ப அதிகமாய் பாதிக்கும்

மழை பெய்தால் பழச்சாறு
வியாபாரம் படுத்து விடும்
இடைவெளியுடன் உலர்த்திய
துணிகள் காய நேரமாகும்

உஷ்ணம் கொடூரமாயிருந்தால்
சாலையில் நடப்பதே சிரமம்

எதில் கஷ்டம் இல்லை
எதுவும் சுலபமானதல்ல

உணர்ந்து செயல்படு தோழா..
அனைத்து  நாட்களும் நமதே!

-பி. பழனி, சென்னை.