tamilnadu epaper

கிரீன்லாந்தில் குழப்பத்தை உருவாக்கும் அமெரிக்கா

கிரீன்லாந்தில் குழப்பத்தை  உருவாக்கும் அமெரிக்கா

கிரீன்லாந்தை டென்மார்க் முறையாக பாதுகாக்கவில்லை என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் பேசியுள்ளார். கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற திட்டத்தை தீவிரப்படுத்தி வருவதன் ஒரு பகுதியாக கிரீன்லாந்தை அமெரிக்காவால் மட்டுமே சிறப்பாகப் பாதுகாக்க முடியும் என உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். மேலும் கிரீன்லாந்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தளத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.