வலங்கைமான் அருகே உள்ள கீழ விடையல் பிங்கள விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக திருப்பணிக்காக பாலஸ்தாபனம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கீழ விடையல் கிராமத்தில் அமைந்துள்ள பிரம்ம சண்டி சேத்திரத்தில் அருள் பாலித்து வரும் நூறு ஆண்டுகள் பழமையான பிங்கள விநாயகருக்கு கும்பாபிஷேக திருப்பணிக்காக பாலஸ்தாபனம் நடைபெற்றது.முதல்நாள் யாகசாலை ப்ரவேசம் நடைபெற்று முதல் கால பூஜைகள் நடைபெற்று, இரண்டாவது நாள் இரண்டு காலங்களும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று பிங்கள விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனையும் நடைபெற்று பக்தர்கள் பொதுமக்களுக்கு அருட் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் யாகசாலை பூஜைகளை கீழவிடையல் ஸ்ரீவித்யானந்த சிவாச்சாரியார் மற்றும் சிவசங்கர சிவாச்சாரியார், சரபேஸ்வர சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. பாலஸ்தாபனம் நிகழ்ச்சியில் கிராமவாசிகள், சென்னையில் இருந்து வெங்கட் ராமன், சாரநாதன், வழக்கறிஞர் ஸ்ரீதர், தொழிலதிபர் ஆனந்த், சேதுராமன், வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கீழவிடையல் கிராமவாசிகள், திருப்பணி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.