வேலூர், ஏப். 21-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் செருவங்கிஅருகே புனித வெள்ளி ஈஸ்டர் நற்செய்தி திருவிழா அகாபே ஏ.ஜி.சபை பிஷப் டி.பி. நோவா பாஸ்டர் தலைமையில் நடந்தது. டாக்டர் ஆர். டி . செல்வராணி முன்னிலை வகித்தார். இவ்விழாவில் ஆர்.டி. ராஜ்குமார் பாஸ்டர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இவ்விழாவில் திருச்சபை பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு ஈஸ்டர் பெருநாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி திருநாளை விமரிசையாக கொண்டாடினர்.