பெரு மழை பெய்ததில்
மண் வீடு இடிந்து போனது ...
மாரிமுத்துவும் அவன் மனைவியும்
இடிந்து போன வீட்டை
கண்ணீர் மல்க பார்த்து நிற்க...
ஐந்தாவது படிக்கும் மகன்...
ஆற்றுப்பாலத்தில்...
ஓடும் வெள்ளநீரை...
வேடிக்கை பார்க்க ...
விரைந்து ஓடினான் ....
திருநங்கை...( கவிதை )
திருவும் -நங்கையும்...
கலந்த....
கலவையானதால்...
நாங்கள் ...
திருநங்கை ஆனோம்...!
வலி....( கவிதை,)
மாடி வீடு கட்டி ....
மனைவி பிள்ளைகளுடன் ...
மகிழ்ச்சியோடு வாழ்ந்தாலும் ...
மனசு வலிக்கிறது ....
அன்பு காட்டி ....
வளர்த்த அம்மா....
அனாதை இல்லத்தில் ....
இருப்பதை....
நினைக்கும் பொழுது...!
கவிஞர்
ரெட்டியபட்டி எஸ் மணிவண்ணன்.