கேரளாவும் கேரள காவல்துறையும் பெருமைப்படத்தக்க மற்றொரு சாதனையைப் படைத்துள்ளன. கைது செய்யப்படுபவர்களின் உரிமைகள் குறித்து கேரள காவல்துறையினர் மிகவும் அறிந்திருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தியாவில் உள்ள காவல்துறை அதிகாரிகளில் பெரும் பகுதியினர் தங்கள் கடமைகளைச் செய்யும்போது சித்திரவதையைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்துகிறார்கள் என்பதையும் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. இந்தியாவில் காவல் துறையின் நிலை குறித்த அறிக்கையில் (சிஎஸ்டிஎஸ்) இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. கேரள காவல்துறை குற்றவாளிகளுக்கு எதிரான கும்பல் கொலைகளை ஒரு சதவிகிதம் கூட ஆதரிக்கவில்லை என்றும் சிஎஸ்டிஎஸ் அறிக்கை கூறியுள்ளது. ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர்களின் உரிமைகளை மதிக்கவில்லை. குற்றவாளிகளுக்கு எதிரான கும்பல் கொலைகளுக்கு ஆதரவான நிலை குஜராத் (57%), ஆந்திரா (51%), மகாராஷ்டிரா (50%), தமிழ்நாடு (46%) ஒடிசா (42%) ஆகிய மாநிலங்களில் அதிகமாக உள்ளது. இது தொடர்பான தற்போதைய நிலைமை பின்வருமாறு: கேரளம் (0%), பஞ்சாப் (3%), உத்தரபிரதேசம் (4%) தில்லி (10%). இந்தத் தகவல், தில்லியைச் சேர்ந்த சென்டர் பார் தி ஸ்டடி ஆப் டெவலப்பிங் சொசைட்டீஸ் (சிஎஸ்டிஎஸ்) 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பல்வேறு பதவிகளில் உள்ள 8276 காவல்துறை அதிகாரிகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.