கோலாகலம்! விழுப்புரம்,ஏப்.7-
விழுப்புரம் மாவட்டம், கோலியனூரில் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. இந்த கோயில் கி.பி. 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. மூலவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் மேற்கு நோக்கி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். இந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் பூமி நாயகி மற்றும் நீளா நாயகி சமேதரராக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீ ராம அவதாரத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீ வரதராஜ பெருமாள் அருள் பாலித்தார். பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ ராஜகோபால் அய்யங்கார் சிறப்பாக செய்திருந்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது.