சட்டம் சரியாக இருக்கு என்று சாக்குப் போக்கு சொல்லும் மேதை மனிதர்களே.
ஏழையை மட்டும் வட்டத்துக்குள் வளைப்பது ஏன் இன்னும்.
பிறப்பில் பேதம், உடல் உறுப்பில் பேதம், இப்படி மனிதன் ஓதும் வேதம் பல.
உள்ளம் ஊனமாய் கிடைக்க நாளும் நல்லவனை காண்பது அரிதாயிற்று.
உண்மையில் சட்டம் எல்லோருக்கும் சமமாக இருக்குது என்பது உண்மைதானா?
உண்மை இல்லாத மனிதர்களால் சட்டம் உண்மையில் பல நேரம் உடைந்து நிற்கிறது.
இருப்பவன் அவனவன் சத்துக்கு, சட்டத்தை கட்டளையிட்டு வளைத்துக் கொள்கிறான்.
சட்டமோ சாபமாய், பணம் இருப்பவனிடம் மண்டியிட்டு அடிமையாய் கிடக்குது.
மீண்டும் ஒரு மேதை வேண்டும்.மூடப் பிறவியை சரி செய்து தர வேண்டும்.
பார்ப்போம் அப்போதாவது ஏழைக்கு, சட்டம் சமமாக கிடைக்குமா என்று...