நீ*
*விழுந்து விழுந்து*
*கா த லி க் கு ம்*
*உண்மையை மறைக்க*
*நீ*
*உன்*
*வீட்டு*
**சன்னலை மூடுகிறாய்!*
*அதையும் தாண்டி*
*உன்*
*கண்களையும் மூடுகிறாய்!*
*எனவே*
*நான்*
*சொல்ல விரும்புவது*
**சன்னல் 'ஐ' மூடாதே என்று தான்!*
*நீ*
*எனக்கெனவே*
*பாடும் வானம்பாடி!*
*உன்*
*பாடலைக் கேட்பதைத் தாண்டி*
*வேறெந்த கானம்*
*என்*
*செவிகளை ஆக்ரமித்து விடப் போகிறது!*
*நீ*
*என்னை*
*மட்டுமே பார்க்கும் அழகரசி!*
*உன்னை*
*ரசிப்பதைத் தவிர*
*வேறெந்தப் பெண்ணை*
*என்*
*விழிச் சன்னல் படம் பிடித்து விடப் போகிறது!?*
*உன்*
*பெயர் ஒன்று போதும்*
*நான்*
*புதுப் புதுக் கவிதைகளை*
*என்னை*
*ஆசையுடன் எழுத வைக்க!*
-முத்து ஆனந்த்
வேலூர்