அக்கா என்னையும் நாளையிலிருந்து உன்னோட வேலைக்குச் கூட்டிப்போங்கக்கா" என்றாள் ராணி.
படிப்பு ஏறாததால் வீட்டில் வளையவர எந்த வேலையையும் கற்றுக்க ஆசைப்படுபவள்.
ஆனால் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலும், உடைகள் சீராகப்" />
"அக்கா என்னையும் நாளையிலிருந்து உன்னோட வேலைக்குச் கூட்டிப்போங்கக்கா" என்றாள் ராணி. படிப்பு ஏறாததால் வீட்டில் வளையவர எந்த வேலையையும் கற்றுக்க ஆசைப்படுபவள். ஆனால் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலும், உடைகள் சீராகப் போடுவதிலும், ரொம்ப அதிகமாக நேரம் செலுத்துபவள். "இவள் எப்படி இந்த சித்தாள் வேலையைக் கற்றுக் கொள்வாள்?" என நினைத்த விசாலம் "கண்ணு! இந்த வேலை வேண்டாம் வேற ஏதாவது வேலை இருந்தால் பாரு", என்றாள். ஆனால் ராணி விடாப்பிடியாக இரண்டு மாசத்தில் கலியாணம் கட்டிக் கொடுத்துடுவாங்கலாம். "அம்மாதான் சொன்னாங்க, நீயும் உனக்கொரு பொழப்பைக் கத்துக்கோ. வாழ்க்கைப் போராட்டத்திற்கு உதவும்.விசாலம் அக்காவோட வேலைக்குப் போய் வேலையைக் கத்துக்கற வேலையைப் பாருண்ணு" விசாலத்திற்கு ராணியின் அம்மா ஞாபகம் வந்தது அழகான பொண்ணாய் ஆயிரம் கனவுகளுடன் வந்தாள் குருவு. இவளை விட அழகு ஐயர் பொண்ணு மாதிரியே அத்தனை நளினம் ஆனாலும் இன்று களை எடுத்தல் என்று வயகாட்டு வேலை பார்த்துதான் வாழ்க்கையை ஓட்டறா. தன் அனுபவத்தால் இவளுக்கும் வாழ்க்கையில் போராட ஏதாவது ஒரு வேலையைக் கத்துக் கொடுக்கணும் என்ற எண்ணம் வந்திருக்கலாம். "அதான் அக்கா நாளை உன்னோடு வரேன். கூட்டிப் போக்கா", என்றாள் "சரி வா, நாளைக்காலை ஏழு மணிக்கு இந்த கம்பம் பக்கத்தில் ரெடியாக வந்து நில்லு. நானும் வந்திடுவேன். மேஸ்த்திரியும் வந்திடுவாரு, எந்த இடத்தில் வேலை? என்று சொல்லுவார்.நாம அங்கபோயி வேலை பார்க்கலாம்", என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். ராணிக்குத் தூக்கமே வரல. எப்போ விடியும், எந்தக் கலர் சாரி கட்டலாம், மேக்கப் போடலாமா என்று எண்ணியபடியே தூங்கினாள். நாளையிலிருந்து நம்ம கிட்டேயும் பணம் வந்துடும். நாம் அதை சேமிக்கலாம். அம்மா பணம் வேணும் என்று கேட்டால் கொடுக்கலாம். நமக்கே ஏதாவது ஆசைப்பட்டு வாங்கணும் என்றால் உடனே வாங்கலாம், இனிமேல் காத்திருப்பெல்லாம் இல்லை..அவள் எண்ணங்களில் கலர் கலராகப் பறந்தாள்.. நாமெல்லாம் அன்னிக்கே சம்பளத்தை வாங்கிடணும். நம்ம அம்மா சொல்றபடி இன்னும் தரல, தந்துடுவாங்க, நாளைக்குக் கட்டாயம் வரும், இதெல்லாம் நமக்குத் தேவையே இல்லை. அதே மாதிரி எந்த கெட்ட பழக்கத்துக்கும் ஆளாகக் கூடாது.வெத்தலை போட்டு குதப்புறாங்களே அம்மா அதை செய்யவே கூடாது. அப்பா கேக்கவே வேண்டாம், உடம்பு வலின்னு அந்த வலிமருந்தை சாப்பிட்டு நாம் எதைச் சொன்னாலும் கேக்காம கண்ணை மூடுதலும், ராத்திரிக்கு மட்டும் எதுவும் வரக்கூடாது வந்தால் அப்பா உதவமாட்டார். "இப்படி எல்லாம் நாமளோ நமக்கு வருவங்களோ இருக்கக்கூடாதுநாம் கல்யாணம் சொன்னவுடனே அவனுக்கு இந்த பழக்கம் இருந்தால் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லனும்.ஆமா, நாம்தான் இப்போ சம்பாதிக்கப் போறோமே". காலையில் எழுந்தவுடன் நன்றாகக் குளித்துத் தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டு தலை நிறையப் பூவுடன் அந்தக் கம்பத்தின் பக்கத்தில் நின்றாள். அதற்குள் அங்கு பெண்கள் கூட்டம். அத்தனை பேர் வாயிலும் வெற்றிலை அரவை. " காலையிலேயே எப்படித்தான் இத மெல்லுவாங்களோ?" அதிலும் ஒருத்தி சுண்ணாம்பை ஆள்காட்டி விரலில் எப்போதுமே குடியிருக்கும் போல, அதனை வாயினுள் லாவகமாக விட்டு அதனுடன் மற்றவிரல்களில் மடக்கிய வெற்றியை வாயினுள் இடுவது சுவாரஸ்யமாகத்தான்க் இருக்கு. ஆனாலும் நமக்கு வேண்டாம்பா" என்று தோளைக் குலுக்கினாள். "ஏன் அக்கா வெத்தலை போடறீங்க?" என்றாள் முகத்தைக் கோணிக்கொண்டு. "வெத்தலை போடலன்னா சுறுசுறுப்பா இருக்காது. இது தப்பில்லை, இதோட புகையிலை சேர்த்து போடறதுதான் தப்பு !" என்றாள். "நான் எல்லாம் பழகவே மாட்டேனாக்கும்", என்றாள் ராணி "சரி, சரி நீ எதுக்கு இங்க நிக்கற?" "நானும் விசாலம் அக்காவோட வேலைக்கு வரேன்". "உன்னால் முடியுமா ராணி? வேறவேலைக்குப் போயேன்!" அதற்குள் விசாலமும் வரவே எல்லாரும் மேஸ்திரிக்காக வெயிட் பண்ணினார்கள். அவசர அவசரமாக வந்த மேஸ்திரி "பதினைந்து பேர் வேண்டும் என்றும் இடத்தையும் விசாலத்திடம் சொல்லிட்டு, கேப் வரும்" எனக் கிளம்பினார். விசாலம் ஆட்களைச் செலக்ட் பண்ணினாள்.அதில் ராணியும் ஒருவள். எல்லாரும் வேலைபார்க்கும் இடத்திற்குப்போக வண்டிக்காகக் காத்திருந்தார்கள். அதற்குள் அங்கு மேஸ்த்திரி வர இவளைப் பார்த்தவுடன் "இவ, வேலைக்கு ஆவாளா?" என்றார். "ஏன் அண்ணே! போக போகப் பழகிக்குவா.ஆசைப்பட்டுத்தான் வந்திருக்கா" என்றாள் அதற்கு மேஸ்திரி" ஆசைப் படுறதுக்கும் வேலை பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கு விசாலம், பார்ப்போம்", என்றார். "நாலுபேர்களைக் கொண்டு இந்தக் குவித்து வைத்திருந்த செங்கற்களை முதலாவது தளத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்" என்றார் மேஸ்திரி முதல் வேலை ராணிக்குக் கொஞ்சம் ஈஸியாகக் கொடுப்போம் என்று நினைத்த விசாலம் அங்குள்ள சட்டியை எடுத்து வரச் சொன்னாள். "ராணி, அந்த சட்டியில் நாலு செங்கற்களை வைத்து முதல் தளத்திற்குக் கொண்டு போகணும்". என்றாள் சட்டியில் செங்கற்கள் வைத்தபின் சட்டியை ராணியிடம் நீட்டி தலைமேல் வைக்கப் சொன்னாள். அவளுக்குத் தலைமேல் கையைத் தூங்கவே வெட்கமாக போய்விட்டது சட்டென்று கையைக் கீழேபோட்டாள். "எனக்குச் சும்மாடு வேண்டாம்", என்றாள் ராணி. அவளை ஒருமாதிரி பார்த்தனர் மற்றவர்கள். "தலை வலிக்கும் ",என்றாள் விசாலம். "இல்லை இல்லை, வேண்டாம்", என்றாள் அவளுக்கு இன்னும் வெட்கமாக போய்விட்டது. தலையில் சுமை ஏறியவுடன் இடுப்புத் தன்னால் தாளமிட பாடலுக்குத் தகுந்தாற்போல் ஆடும் ஹீரோயின் நினைப்பு வரத்தான் செய்தது. பாதி தூரம் போனவள் தலை பேலன்ஸ் பத்தாமல் சட்டியைக் கீழே போட அங்கு அங்குள்ள ஓரிடத்திற்குக் கூட்டிச் சென்றாள். தலைக்கு ஒரு துணியால் கட்டி பின் மீதித் துணியை அந்தச் சட்டி உட்காரும் அளவு மேடாக்கி "இப்போ எடுத்திட்டு போ". என்றாள் இதனைப்பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி தன்னையும் அறியாமல் சிரித்து விட்டாள். ராணிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. "ஏன் சிரிக்கிறீங்க அக்கா?" என்று கேட்க "நானும், வந்த புதிதில் உன்னைப் போலவே நல்ல உடையும் பவுடருமாகத்தான் வந்தேன்". "ஆனால் இந்த வேலைக்கு மனஉறுதி தான் தேவை. இது உனக்கும் போக போகத்தான் தெரியும்", என்றாள். அவள் உடையில்மேல் சட்டை ஆண்கள் அணியும் சட்டையாக, சேலைக்கு மேலே பழைய துணிகளின் சுற்றுக்களும் பார்ப்பதற்குச் சித்தாளு மாதிரியே இருந்தாள். "இதுதான் உண்மையான சித்தாளுஉடை! காலை எட்டு மணியிலிருந்து ஐந்து மணி வரை. "அதன் பின்னர்தான் குளியல் அலங்காரம் எல்லாம். நமக்கு என்று பாத்ரூம் வசதி எல்லாம் கிடையாது. உடல் சரியில்லை எனில் சம்பளம் கிடையாது. அடிபடாமல் நம்மை நாம்தான் காப்பாத்திக் கொள்ளணும். நமது வாழ்க்கை பூராவும் மேஸ்த்திரிக்கு அத்துப்பிடி. இங்குள்ளவர்களின் வாழ்க்கை எல்லாருக்கும் தெரியும்" என்றாள் "ராணி இனித் தன் வாழ்க்கையும் இப்படித்தான் மாறப்போறது என்ற எண்ணமில்லாமலே, கையை மேலே தூக்கவும், முகத்தில் வியர்வை அப்பினால் துடைத்துக் கொண்டும், மறைவே இல்லாமல் சிறுநீர் கழிப்பதும், தனக்குப் பெரியவர்கள் எல்லாம் நின்று கெண்டே கழிப்பதை ஒரு அருவருப்பாகப் பார்த்தும் எப்படியோ அன்றைய வேலையை முடித்தாள் ராணி". "அக்கா, பணம் கொடுத்துடுவாங்களா?" என்றாள் விசாலத்திடம் "பணமா முக்கியம், வேலை கிடைப்பதே கஷ்டம், இதெல்லாம் பார்க்கக் கூடாது. மேஸ்த்திரி சனிக்கிழமை யாச்சுன்னா சம்பளம் கொடுத்துடுவாரு", என்றாள். வீட்டிற்குள் வந்தவளை அம்மா," எப்படி இருந்தது வேலை?" என்றாள். "புரிபடல அம்மா! ஆனால் நான் சித்தாளா மாறிடுவேன் என்பது மட்டும் மனதிற்குள் தோணுகிறது". என்றாள். "தன்பெண் ஒரு பொழப்பைக் கற்றுக்கொள்வாள்", என மகிழ்ந்தாள் தாய். -K. BANUMATHINACHIAR SIVAGIRI Breaking News:
சித்தாளின் முதல்நாள்