சிக்கவலம் ராமர் மடம் அருகில் உள்ள ஸ்ரீ சொக்கநாத விநாயகர் கோயில் சங்ஹடஹர சதுர்த்தி
அருள்மிகு ஸ்ரீ சொக்கநாத விநாயகர் கோயில் சங்கடஹர சதுர்த்தி ஆராதனை | நாகை மாவட்டம் வெளிப்பாளையம் | tamilnaduepaper | Manivannan
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கவலம் ராமர் மடம் அருகில் உள்ள ஸ்ரீ சொக்கநாத விநாயகர் கோயில் சங்ஹடஹர சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது தமிழ்நாடு இ பேப்பர் மற்றும் பண்பலை வாசகர்கள் குடும்ப கோத்திரம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயர் நட்சத்திரம் ராசி போன்றவை வாசிக்கப்பட்டு சங்கல்பம் செய்யப்பட்டது தமிழ்நாடு இ பேப்பர் வாசகர்கள் நோய் நொடி இல்லாமல் சகல சௌ பாக்கியம் கிடைக்க பெற சொக்கநாத விநாயகருக்கு பால் பஞ்சாமிர்தம் சந்தனம் தயிர் விபூதி அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.. சிக்கவலம் கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டுள்ளார்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது தமிழ்நாடு இ பேப்பர் மற்றும் பண்பலை வாசகர்களுக்கு தபால் மூலம் விரைவில் பிரசாதம் அனுப்பி வைக்கப்பட உள்ளது..
நிகழ்ச்சிகளை நாகப்பட்டினம் ஒருங்கிணைப்பாளர் ஆர் மணிவண்ணன் சம்பத் ராகவ பட்டாச்சாரியார் பால கிட்டு ஐயர் லைன்ஸ் கிளப் செல்வராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள்