பாப்பா நீயும்
விளையாடு
ஓடி ஆடி விளையாடு
அழகாய் தமிழில் உரையாடு
அன்பாய் உந்தன் உறவோடு
படிப்பும் உனக்கு ஒருபுறமும்
ஏனைய கலைகள்
மறுபுறமும்
கற்றுத் தேர்ந்து உயர்ந்திடனும்
ஊரும் உறவும் வாழ்த்திடனும்
தாய்த்திருநாட்டை என்றென்றும்
தந்தை தாய் போல்
நினைத்து விடு
அன்பும் பண்பும் நிலைத்திடவே
ஆசையும் ஆர்வமும்
கொண்டு விடு (பாப்பா)
எல்லோரும் ஒன்றாய் ஒருங்கிணைந்து
ஒற்றுமையென்றும் சிறந்ததென
பலரும் அறிய எடுத்துரைப்போம்
பாரதம் தன்னை
உயர்த்திடுவோம் (பாப்பா)
எண்ணும் எழுத்தும் கண்களென
எல்லாம் அறிய விழைந்திடுவோம்
சான்றோர் சொன்னதை
நினைவு கொள்வோம்
சரியாய் வாழ பழகிடுவோம் (பாப்பா)
-வி.பிரபாவதி
மடிப்பாக்கம்