tamilnadu epaper

சூழ் நிலை

சூழ் நிலை

சக மனிதர்களை
பகைத்துக் கொண்டு
வாழ்வது வாழ்க்கையல்ல;

சகதிகளையும்
சகித்துக் கொண்டு
வாழ்வது தான் வாழ்க்கை!

சகலயின்பமும்
நிலைத்து கொண்டாட
பொறுமைக் காத்து வாழ்ந்திடு.......

சூழ்நிலைக் கேற்றபடி
சுதாரித்து வாழ்ந்திடு;இல்லை
நிராகரித்து ஓடிடு!

நிதானம் நிறைய தேவை
நீண்ட பயணத்திற்கு;
வேண்டும் கவனத்திற்கு!

சேறை மிதிக்கிறாயா?
காலடி தள்ளி வைத்திடு
நாலடி விலகி நடந்திடு.......

நல்லதே நடக்கும்......
பகையும் கடக்கும்........
பாதையும் தொடரும்........

 வத்தலாபுரம் முருகேசன்