tamilnadu epaper

ஞாபகங்களால் வலி தந்தாய்

ஞாபகங்களால் வலி தந்தாய்


குறுகிய நிலைப்படியில்

குட்டுகள் ஞாபகங்கள்//

மயில்சிறகினை ஒற்றையாய்

வைத்த புத்தக ஞாபகங்கள்//

ஒருவேளைச் சோறு

வறுமையின் ஞாபகங்கள்//

தைத்துப் போடும்

கிளிசல் ஞாபகங்கள்//

காசில்லாத ஊண்டியல்

சேமிப்பின் ஞாபகங்கள்//

வேற்றிடம் சென்றபின்

வேங்கையாய் இருப்பாய்//

பொன்னான அறிவுரைகள்

எதிர்கால ஞாபகங்கள்//

தலையில் தூக்கிக்

கொண்டாடுவான் ஒருவன்//

களிப்பில் சிரிப்பில்

கல்யாண ஞாபகங்கள்//

யாவும் சிற்றில்

சிதைத்த ஓவியமாய்//

வாழ்வும் அமையா

சிதைந்த ஞாபகங்கள்//

ஞாபகங்கள் யாவும்

வலிதந்து மிஞ்சினவே//

வலிதந்து மிஞ்சினவே//


-பானுமதி நாச்சியார்