துணைவேந்தர் நியமனத்துக்கு
தமிழக அரசுக்கு ஹைகோர்ட்
இடைக்கால தடை விதித்துள்ளது.
தங்க நகை கடன் பெறுவதற்கு
உள்ள நிபந்தனைகள் நகை கடன்
பெறுவதற்கு உள்ள உரிமையை
பறிக்கும் செயலாகும்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களோடு
10 தேர்தலில் நான் வெற்றி
பெற்றுள்ளேன் என்று அமைச்சர்
நேரு கூறியிருப்பது அவருடைய
தன்னம்பிக்கையை காட்டுகிறது
தாலி கதை சரியான சென்டிமென்ட்
கதை. சமீப காலமாக மாமன்
டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற தரமான
படங்கள் வந்திருப்பது நல்ல
வரவேற்பு பெற்றுள்ளது.
சின்னஞ்சிறு கோபுவின் பூசணிக்காய்
கவிதை நல்ல நகைச்சுவை.
பகல் காம் தாக்குதல் குறித்து
மோடிக்கு முன்கூட்டியே தகவல்
தெரியும். அதனால்தான் மோடி
காஷ்மீர் பயணத்தை ரத்து
செய்துவிட்டார் போலும்
பார்லிமென்டில் இயற்றப்படும்
சட்டங்களில் நீதிமன்றம் தலையிடாது
என்ன உச்ச நீதிமன்ற தலைமை
நீதிபதி அறிவிப்பு இனி பாஜக
பாடு கொண்டாட்டம் தான்
.
பாகிஸ்தான் ராணுவ தலைமை
தளபதிக்கு ஃபீல்ட் மார்ஷல் விருது
வழங்கப்பட்டுள்ளது. போரை நிறுத்த
ரஷ்யா தயாரா என உக்ரைன்
கேட்டுள்ளது . எங்களுக்கு
உங்கள் பத்திரிகை படித்து
கடிதம் எழுதவே தலை சுற்றகிறது
உங்கள் டீம் எப்படித்தான்
வேகமாக செயல்படுகிறார்களோ
ஷ் ஷ் இப்பவே கண்ணை கட்டுதே
உங்கள் டீம் ஒர்க்கை பார்த்து
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்
தமிழ்நாடு இ பேப்பர் டீமுக்கு
வாழ்த்துக்கள் சார்.
-நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி