tamilnadu epaper

அதிசயங்களும், மர்மங்களும் !!

அதிசயங்களும், மர்மங்களும் !!


நாஸ்கா கோடுகள் !!

பல்வேறு அதிசயங்களையும், மர்மங்களையும், மனித அறிவுக்கு புலப்படாத பல ரகசியங்களையும் உள்ளடக்கியதுதான் இந்த பூமி.


அவ்வாறு அதிசயம் நிறைந்த இடத்தில் ஒன்றுதான் அமெரிக்காவில் இருக்கும் பெரு நாட்டிலுள்ள நாஸ்கா கோடு. இது நாஸ்கா பாலைவன நிலத்தில் செதுக்கப்பட்டுள்ள வடிவியல் உருவங்கள் ) ஆகும்.


நடுவானில் பறந்து கொண்டிருக்கும்பொழுது மரங்களோ, கட்டிடங்களோ ஒரே சீராக இருப்பதை பார்த்தாலே நம் மனதிற்குள் ஒரு சிறு மகிழ்ச்சி உருவாகிவிடும்.


மனிதன், மிருகம், தாவரம் என பல உருவங்களில் சுமார் 900 வடிவியல் உருவங்கள் அப்பாலைவன நிலப்பகுதியில் காணப்படுகிறது.


எந்தவித தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத அக்காலத்தில் நேர்க்கோட்டில் மிகப் பிரம்மாண்டமான கோடுகளை வடிவமைத்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாகத்தான் கருதப்படுகிறது.



அருகில் இருந்து பார்த்தால், நீண்ட பாதை போல மட்டுமே காட்சியளிக்கும் இந்த கோடுகளை வானத்தில் இருந்து பார்த்தால் மிக பிரம்மாண்டமான பறவைகள் போன்றோ, குரங்கு போன்றோ, சிலந்தி போன்றோ காட்சியளிக்கிறது.


எதனால் இதுபோன்ற கோடுகள் உருவாக்கப்பட்டன? அந்த காலத்திலேயே எப்படி இதுபோன்ற நேர்க்கோடுகளை வடிவமைப்பது சாத்தியம் என்பது போன்ற பல்வேறு மர்மங்களும், தேடுதல்களும் இந்த நாஸ்கா கோடுகளின் பின்னால் இருந்த வண்ணம் இருக்கிறது. 


வெள்ளம், சூறாவளி என பல இயற்கை பேரிடர்கள் வந்தபொழுதும், சுமார் 2000 ஆண்டுகள் இந்த கோடுகள் நிலைத்திருப்பது மிக ஆச்சரியமான ஒன்று.


எந்த ஒரு தொழில்நுட்பமும், உயரத்தில் இருந்து பார்க்கக்கூடிய வசதிகள் இல்லாத காலத்தில் எப்படி வரையப்பட்டிருக்கும் என்பதுதான் வியப்பின் உச்சம்.


குரங்கு வடிவம் :


இரண்டு கால்பந்தாட்ட மைதானங்கள் அளவிற்கு உள்ள இடத்தில் ஒரு குரங்கு வரையப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் ஆரம்பிக்கும் கோடு சிறிய காதுகள், தலை, கால்கள், அளவான உடல், ஆறேழு சுற்று சுற்றிய வால் என சீராக வரையப்பட்டு ஆரம்பித்த இடத்திலேயே முடிகிறது. 


பாடப்புத்தகத்தில் ஒரு ஓவியத்தை சீராக வரையவே நாம் சிரமப்படும் வேளையில், எப்படி பிரம்மாண்டமான கோடுகளைத் தீட்ட முடிந்தது? இந்தக் குரங்கின் முழு உருவத்தைப் பார்க்க வேண்டுமென்றால் குறைந்தது ஒரு கிலோமீட்டர் உயரத்திற்குச் செல்ல வேண்டும். 




வியக்கத்தக்க வண்ணம் வானில் இருந்து பார்க்கும்போது நேரான நீண்ட நாஸ்கா கோடுகள் தற்கால விமான ஓடுபாதையை தெளிவாக பிரதிபலிக்கின்றன.


இந்த மாபெரும் புள்ளிவிவரங்கள் மேலே இருந்து பார்க்கும் போது என்ன பொருள்களை வழங்கும்..? வானத்தில் உள்ள நட்சத்திர கட்டமைப்புகளை தான் இவைகள் நிஜத்தில் பிரதிபலிக்கிறதா..? இந்த பண்டைய முயற்சி எதிர்கால தலைமுறையினருக்கு என்ன சொல்ல முயற்சிக்கிறது..? அல்லது நாஸ்கா கோடுகள் வெறுமனே ஒரு பழங்கால கலை தானா..? என்ற கேள்வி அனைவருக்குள்ளும் உள்ளது.


நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் தங்கள் தீர்வை வெளியிட்டாலும், நாஸ்காவின் மர்மம் மட்டும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.


விலங்குகளாக மாறும் மரம் !!



இந்த உலகில் பல மர்மங்களும், அதிசயங்களும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. பல மர்மங்களுக்கான தீர்வு இன்றுவரை கண்டுபிடிக்க முடியாத புதிராகவே இருக்கிறது.


அப்படி ஓர் மர்மத்தைதான் இன்று நாம் காண இருக்கிறோம்.


மரம் என்றால் நம் நினைவிற்கு வருவது எது? பூ, காய், கனி, நிழல், உயிரினங்களின் வாழிடம் ஆகியவைதான். தன் நிறத்தை, குணத்தை, மணத்தை, வடிவத்தை மாற்றிக்கொள்ளும் பல உயிரினங்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.


அவ்வளவு ஏன் மனிதர்கள் கூட மரத்தில் வீடு கட்டியிருப்பதை பார்த்திருக்கிறோம். ஒரு மரம் எப்படி விலங்குகளாக மாறுகிறது என்பதை பற்றி


இந்த மரம் தனது வடிவத்தை மாற்றிக்கொள்கிறது. பல விலங்குகளின் உருவங்களை தன்னுள் வைத்திருக்கிறது. இது எவ்வாறு உருவானது என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.


ஆந்திர மாநிலத்தில் நல்கொண்டா பகுதிக்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட ஒரு இடத்தில் அமைந்துள்ள வனம் பலவகையான மரங்களை தன்னுள் கொண்டுள்ளது. அதில் ஒன்றுதான் விலங்குகளாக மாறும் இயற்கையாகவே வளர்ந்து உருவான மரம்.


இந்த மரம் தனது வடிவத்தை விலங்குகளாக மாற்றிக் கொள்கிறது என கூறப்படுகிறது. ஆனால், இது மனிதர்களால் செயற்கையாக வடிவமைக்கப்பட்டது என்று கூறுவதற்கான ஆதாரங்கள் ஏதுமே இல்லை.


மரத்தின் சிறப்புகள் : 


இம்மரம் பெரிய அளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது.


பரந்து விரிந்த இம்மரத்தில் அனகோண்டா உருவம் ஒன்று உள்ளது. இந்த உருவம் பார்ப்பதற்கு அப்படியே அனகோண்டா பாம்பு போலவே இருக்கிறது.


இந்த அனகோண்டா வளைந்து வாயைப் பிளந்தவாறு, உண்மையான பாம்பை போலவே தோற்றமளிக்கிறது.


இம்மரத்தின் மற்றொரு பக்கத்தில் முதலையின் உருவம் பதித்தது போன்றும், முதலையின் உடலில் இருக்கும் மேடு பள்ளங்கள் கூட அப்படியே அமைந்திருக்கும் வகையிலும் உள்ளது.


மேலும், இந்த மரம் முழுவதும் கிங்காங் குரங்கு உருவம், சிலந்தி, தேள், பாம்பு, பறவைகள், பூச்சி இனங்கள் போன்ற அனைத்து உயிரினங்களின் உருவமும் இருப்பதுடன், இவைகள் உயிருடன் இருப்பது போன்றும் தோற்றமளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.


அடர்ந்த காடு என்பதால் யாரும் இங்கு இரவு நேரங்களில் செல்வதில்லையாம். ஆனால், இந்த மரம் இன்று வரை மர்மமாகவே இருந்து வருகிறது.


ஏன் இந்த மரம் இவ்வாறு தோற்றமளிக்கிறது என்பது பற்றிய விவரம் இன்றுவரை மர்மமாகவே இருந்து வருகிறது. இதனால் இந்த மரத்தை மர்ம மரம் என்றும், அமானுஷ்ய மரம் என்றும் பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.


அற்புதங்களும், ஆச்சர்யங்களும் நிறைந்த அமேசான் காடு


அமேசான் என்னும் அற்புதம்...!!


வருடமெல்லாம் கொட்டும் மழை...!!


சூரிய வெளிச்சமே பார்க்காத அமேசான் தரை...!!


கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்களும், செடிகளும் பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு...!!


இதுவரை கண்டிராத எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள்!!


இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர்...!!


இவ்வளவு சிறப்புகள் நிறைந்த அமேசான் காட்டை உருவாக்கிய பெருமை அமேசான் நதிக்கே போய் சேரும்...!!


அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும்.


இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச.கி.மீ ஆகும். மேலும் இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது.


அந்நாடுகள் பிரேசில் (ஏறத்தாழ 60 சதவீத மழைக்காட்டினை உள்ளடக்கியது), கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகியனவாகும்.


அமேசான் காடுகளின் ஜீவாதாரமாய் விளங்கும் அமேசான் நதி உலகின் மிகப்பெரிய நதியாகும்.


இங்கு இருக்கும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட தாவரங்களை இன்னும் உலகத் தாவரவியல் வல்லுநர்களே படித்தது இல்லை என்பது அமேசானின் பிரம்மாண்டத்தை உலகுக்கு உணர்த்துகிறது.


அமேசானில் கிடைக்கும் 3000 பழ வகைகளில் 200 வகை மட்டுமே நம் பயன்பாட்டிற்கு வருகிறது. ஆனால், அங்கே வாழும் மக்கள் சுமார் 2000 இந்த அரிய பழ வகைகளை உண்ணும் பேறு பெற்றவர்களாய் உள்ளனர்.



உலகின் மிகப்பெரிய பாம்பினமான அனகொண்டா வகைப் பாம்புகள் அமேசான் நதிக்கரைகளில் வெகு சாதாரணமாய் காணப்படுகின்றன. இதன் மூக்குப்பகுதியை மட்டும் நீர் மட்டத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்குமாம்.


இன்றும் அமேசான் காடுகளிலும், நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே உள்ளன.


‎அமேசான்‬ மழைக்காடுகளுக்கு மத்தியில் ஆவி பறக்க ஒரு கொதிக்கும் ஆறு பாய்கிறது. இந்த ஆற்றில் விழுபவர்கள் அனைவரும் தீயில் இருப்பது போன்று உணர்வதாக தெரிவித்துள்ளனர்.


மனித இனம் காணாத பல அதிசயங்கள் இங்கு ஒளிந்திருக்கின்றன.


அமேசான் காடுகளுக்குள் சென்றுவிட்டு எளிதில் மீண்டு வர முடியாது. இதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான்.


ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த அமேசான் காட்டிற்கு சென்று வருவதை கற்பனை செய்தாலே ஜில்லிட்டுப் போகிறது.


ஈஸ்டர் தீவில் நீடிக்கும் மர்மம் !!


மர்மத் தீவில் மறைந்துள்ள ரகசியம்!!



உலகில் கண்டுபிடிக்க முடியாத மர்மங்களில் ஒன்று பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ள 

இது சிலி கரையோரத்திலிருந்து 2,300 மைல்கள் தொலைவிலுள்ள ஒரு தீவு. இந்த தீவு பல ஆச்சரியங்களும், மர்மங்களும் நிறைந்த இடமாகவே அமைந்திருக்கின்றது.


மனித முகம் போல் தோற்றமுடைய மோவாய் என்று சொல்லப்படும் 800க்கும் மேற்பட்ட கற்சிலைகள் தீவெங்கும் காணப்படுகின்றன.


முழு உருவச் சிலைகள் என்றில்லாமல் மார்பளவு மற்றும் இடுப்பு வரையிலுமான சிலைகளாக உள்ளன.


சிலைகளில் ஒருவகை குட்டை காதுகளை கொண்டும், இன்னொரு வகை நீண்ட காதுகளை கொண்டும் இருக்கிறது.


ஒவ்வொரு சிலையும் 10 மீட்டர் உயரத்திலும் 80 முதல் 250 டன் எடையிலும் உள்ளது. மனிதர்களே இல்லாமல் சிலைகளுடன் உள்ள 


ஏன் இந்த கற்சிலைகளை உருவாக்கினார்கள்?


எதற்காகத் தீவைச் சுற்றி அவற்றை அடுக்கி வைத்திருக்கின்றார்கள்?


செதுக்கிய இந்த சிலைகளை எப்படித் தீவின் மையப் பகுதியிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் இருக்கும் கரைக்கு நகர்த்தி வந்தார்கள்?


இந்த கேள்விக்கான விடைகள் இன்று வரை மர்மமாகவே உள்ளது.


இந்த சிலைகள் தீவைச் சுற்றி நிறுத்தப்பட்டிருப்பதோடு மட்டுமில்லாமல், தீவு முழுக்க நூற்றுக்கணக்கில் பாகங்களாய் சிதறியது போலப் போடப்பட்டிருக்கின்றன.


தீவிலுள்ள மரங்களை வெட்டியே இவற்றை கடற்கரை வரை நகர்த்தியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.


இதில் பாதி சிலைகள் கடலைப் பார்த்தும், பாதி சிலைகள் தீவைப் பார்த்தும் உள்ளன.



இந்தத் தீவில் ஒரே ஒரு சிலை மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கும். அது முட்டியிட்டப்படி அமர்ந்திருக்கும். அதன் முகம் சற்றே மேலே பார்த்தவாறு, குறுந்தாடியோடு இருக்கும். இது அந்தத் தீவின் சுநன Pரயெ Pரய எனும் கல்லைக் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது.


பல மர்மங்கள் நிறைந்த இத்தீவைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.


ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அதிசய கோவில்கள் !!



உலகிலுள்ள கோவில்களில் இன்றும் பல அதிசயங்களும், ஆச்சரியங்களும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றில் சில மர்மங்கள் எளிதில் நம்ப முடியாததாகவும், நம்மை அப்படியே வியப்பில் ஆழ்த்துவதாகவும் அமையும். அந்த வகையில் இன்று இரு கோவில்களில் நடக்கும் அதிசய நிகழ்வைப் பற்றி 


குஜராத் மாநிலத்தில் உள்ள சபலி என்னும் ஊரில் அமைந்துள்ளது மா காளி மந்திர் கோவில். இந்த கோவிலில் உள்ள பாறை ஒன்றில் எங்கு தட்டினாலும் மணி ஓசை கேட்கும் அதிசயம் நிகழ்கிறது.


அந்த கோவிலில் பல பாறைகள் இருந்தாலும் ஒரே ஒரு பாறையில் மட்டும் இந்த அதிசயம் நிகழ்கிறது.


அங்கு செல்பவர்கள் யார் வேண்டுமானாலும் இதை சோதித்து பார்க்கும் வகையில் அந்த பாறை வெளியில் வைக்கப்பட்டுள்ளது.


இந்த அதிசய நிகழ்வைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட ஆய்வாளர்கள், அந்த குறிப்பிட்ட பாறையில் அதிக அளவிலான இரும்பு இருப்பதால் அதன் சத்தம் விசித்திரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.


பல பாறைகள் இருந்தாலும் குறிப்பிட்ட ஒரு பாறையில் மட்டும் எப்படி இவ்வளவு அதிகமான இரும்பு இருக்கிறது என்பது இன்றும் விடைக்கிடைக்காத புதிராகவே உள்ளது.


இரவில் பேசும் கடவுள் சிலைகள் :



பீகார் மாநிலத்தின் பக்ஸார் பகுதியில் அமைந்துள்ளது ராஜ ராஜேஸ்வரி பால திரிபுர சுந்தரி கோவில். இக்கோவில் 400 வருட பழமையான கோவிலாகும்.


இந்த கோவிலில் இரவு நேரங்களில் மட்டும் மர்ம குரல்கள் ஒலிப்பதாக அங்குள்ள பக்தர்கள் கூறுகின்றனர்.



கோவிலில் உள்ள கடவுள் சிலைகள் பேசிக்கொள்வதால் தான் மர்ம குரல்கள் கேட்கிறது என்று சிலரும், இந்த மர்ம ஒலிகள் கருவறைக்கு வெளியில் இருந்து தான் வருகிறது என்று சிலரும் கூறுகின்றனர்.


இக்கோவிலில் நிகழும் இந்த மர்ம நிகழ்வு ஞானிகளுக்கும், கோவில் பெரியவர்களுக்கும் இன்றும் புரியாத புதிராகவே உள்ளது.


உலக அதிசயம் : மதியை மயக்கும் மச்சு பிச்சு!!


உலக அதிசயங்களில் ஒன்றான மச்சு பிச்சு, உருபாம்பா பள்ளத்தாக்கின் அருகே அடர் காட்டில், அருவிகளின் ஆரவாரத்தில் கற்பனை செய்ய முடியாத அழகின் உச்சத்தில் அமைந்துள்ளது.


இந்நகரத்தை இன்காவின் தொலைந்த நகரம் என்றும் கூறுவார்கள்.


இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படும் மச்சு பிச்சு, பெரு நாட்டின் கஸ்கோ நகரிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.


மிகவும் துல்லியமாக கணித்து கட்டப்பட்டுள்ள மச்சு பிச்சு இன்கா காலத்தின் கட்டிடக் கலைக்கு சான்றாக அமைந்துள்ளது.


1450ஆம் ஆண்டு கட்டப்பட்ட மச்சு பிச்சு, கடல் மட்டத்திலிருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய நகரமாகும்.


இந்த நகரத்தை 1911-ல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இன்று வரை இந்நகரம் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.



150க்கும் மேற்பட்ட கட்டிடங்களால் உருவான மச்சு பிச்சுவை 1983ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது.


50டன் எடை கொண்ட பல கற்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மலைமீது இந்த கற்கள் எப்படி கொண்டுவரப்பட்டது என்பது மிகப்பெரிய ஆச்சரியமே.


மலையடிவாரத்தில் இருந்து பார்த்தால், மலை உச்சியில் இருக்கும் கட்டிடம் பார்வைக்குத் தெரியாதவாறு கட்டப்பட்டுள்ளது.


செங்குத்தான மலைத்தொடரின் உச்சியில் 1000 பேர் வாழும்படியாக ஒரு நகரத்தை எந்தவித தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் எப்படி உருவாக்கினார்கள்? என்பது வியப்பின் உச்சம்.


மச்சு பிச்சுவின் கட்டுமானத்திற்கு இரும்பு ஆயுதங்களோ, பொதி சுமக்கும் விலங்குகளோ பயன்படுத்தப்படவில்லை என்பது தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.


100க்கும் அதிகமான படிக்கட்டு வரிசைகள் இதன் வளாகத்தில் அமைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான படிகள் ஒற்றைக் கல்லைக் குடைந்து செய்யப்பட்டவையாகும்.


அஷ்லார் என்ற தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி, இரு கற்களுக்கிடையே ஒரு கத்தி நுனி கூட நுழைய முடியாத அளவு கனக்கச்சிதமாகப் பொருத்தியுள்ளது உலக அதிசயமாகும்.


இங்குள்ள இன்டிகுவாட்டானா என்ற சூரியனுக்குக் கட்டப்பட்ட ஒரு கோவில் இதன் முக்கிய பகுதியாகும்.


இந்த புனிதக் கல், வானியல் மணிக்கூடாக அதாவது, சூரிய கடிகாரமாக கருதப்படுகிறது.


தொல்லியல் நிபுணர்கள் இந்நகரம் ராஜ எஸ்டேட்டாகவும், ரகசிய சடங்கு நிறைவேற்றும் இடமாகவும் விளங்கியதாக கூறுகின்றனர்.


மனிதர்கள் செல்வதே சவாலாக இருக்கும் இந்த இடங்களில் உள்ள இந்த கட்டிடங்கள் இன்றளவிலும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது.


மச்சு பிச்சுவின் கட்டிடக் கலையையும், இயற்கை அழகையும் காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர்.



உலகின் மிகப்பெரிய பிரம்மிப்பான இடம் !!

 இந்த உலகமே ஆச்சரியங்களும், அதிசயங்களும், எழில் கொஞ்சும் இயற்கை அழகும் நிறைந்ததாகவே உள்ளது. இதில் பார்த்து ரசித்தது கொஞ்சமே, இன்னும் காணவேண்டியது ஏராளம்!!


 இந்த உலகின் இயற்கை அழகை காண கண்கோடி வேண்டும். இந்தமாதிரி அழகான ரம்யமான இடங்கள் எங்கிருந்தாலும் அதை தேடி கண்டுபிடித்து அங்கு சென்று இயற்கை அழகை ரசிக்கக்கூடியவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு ஏற்ற இடம்தான் இது.


 உலகின் மிகப்பெரிய பிரம்மிப்பான இடம் தான் தி கேட் டூ ஹேவன். இது சீனாவில் அமைந்துள்ள ஒரு இயற்கை அழகு மிகுந்த மலைப்பகுதி. இது மிகவும் ஆபத்துகள் நிறந்த பகுதியும் கூட.



 இந்த தி கேட் டூ ஹேவன் மலைப்பகுதியை அடைய கிட்டத்தட்ட 99 கொண்டை ஊசி வளைவுள்ள சாலையை கடந்தால் தான் அதன் கீழ் பகுதியை சென்றடைய முடியும். மேலும், இந்த தி கேட் டூ ஹேவன் அழகை ரசிக்க அங்கிருந்து 999 படிகட்டுகள் ஏற வேண்டும்.


 நிறைய ஆபத்துகள் நிறைந்த சாலைகள் மற்றும் 999 படிக்கட்டுகளை கடந்து சென்று பார்க்க பெரிய கட்டிடக்கலையோ, கோவிலோ அல்லது வரலாற்று சிறப்புமிக்க இடமோ கிடையாது.


அங்குள்ள குகை போன்ற அமைப்புடைய அந்த இடத்தில் நின்று சுற்றியுள்ள இயற்கை அழகை ரசிக்க இரண்டு கண்கள் போதாது. அந்தளவுக்கு அந்த இடமானது மிகவும் அழகாவும், அமைதியாகவும் இருக்கும்.



 இந்த இடத்தின் சிறப்பு என்னவென்றால் காலை சூரிய உதயத்தின் போதும், மாலை பனி மூட்டம் ஆரம்பமாகும் போதும் அந்த குகை போன்ற துளை வழியாக வரக்கூடிய சூரிய வெளிச்சத்தையும் மற்றும் பனிமூட்டத்தையும் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.


 இதன் காரணமாக தான் இந்த இடத்திற்கு தி கேட் டூ ஹேவன் பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.


 உண்மையிலேயே அதிகமாக திரில் உள்ள பகுதிக்கு மலையேற்றத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கு சென்று வரலாம்.



 Thanks and regards 

A s Govinda rajan 

17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai