tamilnadu epaper

சிறகுகள் விரித்து விடு ...

சிறகுகள் விரித்து விடு ...


சிறகடிக்க கற்றுக் கொள்

மனமே!!

சிறகடிக்க கற்றுக் கொள்!!

சிந்தனை சிதைந்துவிடில்,

சிறகுகள் முடங்கிடுமே!!!


சிறகுகள் முடங்கிவிடின்,

மனம் செயல்திறன் இழந்திடுமே!! 

செயல் திறனற்றுவிடின் 

செல்லாக் காசாகிடுமே வாழ்க்கை!!


கவலையென்னும் சிறிய நூல் 

கட்டிடுமே நமை வாழ்வில்...

கவனங்கள் சிதறிடுமே  

காரிருளில் தள்ளிடுமே!!


தன்னம்பிக்கையென்னும் 

தாரக மந்திரம் 

தகர்த்திடுமே தடை கற்களை!!!


நம்பிக்கையெனும் 

நட்சத்திர ஒளிதனிலே 

நடந்து விடலாம் பாலையிலும்...   


பயனற்ற சிந்தனையால்,

பலமற்று போகாதே மனமே!!


கவலைகள் களைந்து விடு.. 

காரியம் ஆற்றிவிடு..

சிந்தனை தெளிந்துவிடு 

சிறகுகள் விரித்துவிடு!!!  



-தி.வள்ளி