போகிற போக்கில்
புன்னகையை
வீசிச்செல்கிறாய்!
கடைக்கோடிப்
புன்னகையாலேயே
என்னை
வெல்கிறாய்!
கருவிழிகளாலே
மாளாத
காதலை
சொல்கிறாய்!
அழைத்தால்
மட்டும்
வராமலே
செல்கிறாய்!
மௌனத்தால்
எந்தன்
மனதை
கொல்கிறாய்!
என்னை
நினைவால்
சுமந்துக்
கொள்கிறாய்!
என்னில்
உள்ளக்
காதலை
நானறிவேன்!
உன்னில்
உள்ளக்
காதலை
நானறிவதும்
எப்பொழுதோ
அப்பொழுதே
தொடங்குமே
பொன் மாலை
பொழுதுகள்!
அன்றோடு
அடங்குமே
காதலின்
வினாக்குறியும்!
நம்மில்
உள்ளக்
காதலை
நாமே
கொண்டாடிடவே
என்னவளாகி
வந்து விடு!
இல்லறத்தின்
இன்பங்களை
என்றென்றும்
தந்து விடு!
ரேணுகா சு்ந்தரம்