tamilnadu epaper

டோங்கா தீவில் ரிக்டர் 7.0 அளவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

டோங்கா தீவில் ரிக்டர் 7.0 அளவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

நுகுஅலோபா


தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று மாலை 5.48 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.


10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 20.06 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 174.04 டிகிரி மேற்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இதனால் சுனாமி ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.