tamilnadu epaper

தடாகத்து மீன்கள்

தடாகத்து மீன்கள்

பரம்பரைச் 
சொத்துக்கள்
பாதிவரை 
உடன்வரும்!

சம்பாதித்த 
உடைமைகள்
செலவழிக்கக் 
கரைந்திடும்!

என்னாளும் 
நிரந்தரம்
ஆசானீந்த 
கல்வியொன்றே!

மற்றோரை 
உயர்த்தி
மகிழ்ச்சியுறும் 
மாமனிதர்கள்!

ஆசிரியப்
பணிபுரியும்
அகிலத்து 
தெய்வங்கள்!

தருவதில்  
களிப்புறும்
தடாகத்து 
மீன்கள்!

ஊதிய 
நோக்கம்
சிறிதுமிலா 
உபாத்தியாயர்கள்!

சாதிபேதம் 
பார்க்காத
சமத்துவ 
வாழைகள்,!

மேதினிக்கு 
அறிவொளி
ஏற்றி மகிழும்
மெழுகுவர்த்திகள்!

விதிக்கப்பட்ட 
வறுமைக்காய்
நிறமிழக்கா 
வானவில்கள்!

ஏற்றிடும் 
ஏணிகளாய் 
என்றென்றும் 
ஆசான்களே,!
-------
முகில் தினகரன், கோவை