திரும்பிய திசையெல்லாம் திகில் நிறைக் காட்சிகளாய் கொலை, கொள்ளை, கற்பழிப்பு!
கற்பழிப்புக்கு துணை போகும் 'பத்து பவுன் பாட்டி' கழுத்தறுத்துக் கொலை!
கொலையோடு 'சங்கிலி பறிப்புக் கொடூரங்கள்' தலைக் கவசம் அணிந்து, பாதுகாப்பாய்!
பாதுகாப்பாய் மகளை பள்ளிக்கு அனுப்பியும், பரிதவிக்கும் பெற்றெடுத்த பாவி மனம்!
மனம் ஏகமாய் தவிக்கும் காரணம்
மலிந்து போன பாலியல் துயரங்கள்!
துயரங்கள் எந்த விதத்திலும் வருமென வெளிச்சம் போடும் திருட்டுச் சம்பவங்கள்!
சம்பவங்கள் சுத்தமாய் திட்டமிட்டு, தடயம் இன்றி நடக்கும் 'டிஜிட்டல்' கொள்ளைகள்!
கொள்ளைகளில் வித்தியாசமாய், 'குடிப்பதற்கே' கட்டிய தாலி அறுக்கும் 'பெருங் குடிமகன்கள்'!
குடிமகன்களைத் திருத்த மறுவாழ்வு மையங்கள் இருந்தும் நாடே தள்ளாடும் மதுவில்!
மதுவில் மூழ்கிய மக்களை மீட்கவே முடியாமல் தடுமாறும் காவல் தெய்வங்கள்!
- வேலூர் மூ.மோகன்.