திருமூழிக்களம்*, எர்ணாகுளம்
மூலவர் : லட்சுமணப் பெருமாள் (திருமூழிக்களத்தான், அப்பன், சுக்திநாதன்)
தாயார் : மதுரவேணி நாச்சியார்
கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தலமாக, ஒருகாலத்தில் திருமூழிக்களம் விளங்கியுள்ளது. ஸ்ரீசுக்தி இங்கு அருளப்பட்டதால், பல நூல்கள் ஆராயப்பட்டன. கற்றறிந்த சான்றோர் பலர் குழுமியதால், இந்நகரம் கல்வி மாநகராகவும், கலை மாநகரமாகவும் சிறப்பு பெற்றுள்ளது.
இராமாயணத்தில் இலக்குவனுடன் பரதனும் சேர்ந்து வழிபட்ட தலமாகும். இத்தலத்திற்கு இலக்குவன் கோபுரம், மண்டபம் போன்றவற்றை எழுப்பி பல திருப்பணிகள் செய்தான்
4 திருக்கரத்துடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் மூலவர் அருள்பாலிக்கிறார். மேல் இரண்டு கைகளில் சங்கு, சக்கரம், வலது கீழ்க்கையில் கதை, இடது கீழ்க்கையில் தாமரை மலருடன் அருள்பாலிக்கிறார். சிவபெருமானுக்கு தனி சந்நிதி உள்ளது.
கீதா ராஜா சென்னை