tamilnadu epaper

தினம் ஒரு திவ்ய தேசம்

தினம் ஒரு திவ்ய தேசம்

திருவல்லவாழ்(திருவல்லா)*,

பந்தனம் திட்டா, கேரளா

 

மூலவர் : திருவாழ்மார்பன் (ஸ்ரீ வல்லபன் கோலப்பிரான்) | தாயார் : செல்வத் திருக்கொழுந்து நாச்சியார்

 

பிரம்மச்சாரி இளைஞர்கள் அங்கவஸ்திரம் அணிவதில்லை. அதேபோல் இத்தல பெருமாளும் அங்கவஸ்திரம் அணியாமல் மார்பு தெரிய காட்சியளிக்கிறார். பெருமாளின் மார்பில் திருமகள் நிரந்தரமாகக் குடியிருப்பதால், இத்தல பெருமாள் ’திருவாழ்மார்பன்’ என்று அழைக்கப்படுகிறார். மற்ற தலங்களில் பெருமாளின் திருவடி தரிசனத்துக்கு தனிச்சிறப்பு என்றால், இத்தல பெருமாளின் மார்பு தரிசனத்துக்கு தனிச்சிறப்பு உண்டு.

 

கருடாழ்வார் 50 அடி உயரத்தில் உள்ள தூணின் மீது பறக்கும் நிலையில் அருள்பாலிக்கிறார். கருடாழ்வாருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டுள்ளது. 

 

கீதா ராஜா சென்னை