tamilnadu epaper

தினம் ஒரு திவ்ய தேசம்

தினம் ஒரு திவ்ய தேசம்

திருக்கடித்தானம்* கோட்டயம், கேரளா

 

மூலவர் : அற்புத நாராயணன் (அம்ருத நாராயணன்) ; நின்ற திருக்கோலம்

தாயார் : கற்பகவல்லி நாச்சியார் 

 

இத்தல பெருமாள் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாகவும், கலியுக முடிவில் ஒளியாக மாறி விண்ணில் கலந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

 

ஒரு கடிகை நேரம் (நாழிகை - 24 நிமிடம்), இத்தலத்தில் தவம் மேற்கொண்டால், அனைத்து செயல்களில் வெற்றி கிட்டும் என்பது ஐதீகம். நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

 

திருக்கடித்தான பகுதியை ஆண்டு வந்த ருக்மாந்தன் என்ற மன்னர், மலர்களை பறிக்க வந்த தேவர்களை கைது செய்ததால், அவர்கள் மீண்டும் வானுலகுக்கு செல்ல வேண்டிய வலிமையை இழந்துவிட்டனர். மன்னர் மன்னிப்பு கேட்டு, இதற்கு பரிகாரம் என்ன என்று கேட்டபோது, உன்னுடைய ஏகாதசி விரத பலனை எங்களுக்கு நீ அளித்து விட வேண்டும் என்று கூறினர். மன்னர் இத்திருக்கோவிலுக்கு வந்து பெருமாள் முன்னிலையில் இதனை செய்தார். இத்தனையும் ஒரு கடிகை நேரத்திற்குள் நிகழ்ந்ததால் திருக்கடித்தானம் என்ற பெயர் வந்தது.

 

கீதா ராஜா சென்னை