திருப்புலியூர்* , ஆலப்புழா கேரளா
மூலவர் - மாயப்பிரான்
தாயார் - பொற்கொடி நாச்சியார்
பஞ்ச பாண்டவர்களுள் பீமனால் புதுப்பிக்கப்பட்டு, இவ்விடத்தில் இருந்து திருமாலை நோக்கி அவர் தவம் புரிந்ததால் இத்தலம் பீம ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பெரிய கதாயுதம், பீமன் உபயோகப்படுத்தியது என்று கூறப்படுகிறது.
நம்மாழ்வார் காலத்தில், இப்பகுதியில் ஒரு பெரிய நகரம் இருந்ததாக அவரது பாடலின் மூலம் அறியப்படுகிறது. இத்தலத்தை இப்பகுதி மக்கள்” குட்டநாடு திருப்பூர் ‘என்று அழைக்கின்றனர்.
கீதா ராஜா சென்னை