tamilnadu epaper

தினம் ஒரு திவ்ய தேசம்

தினம் ஒரு திவ்ய தேசம்

திருவட்டாறு* கன்னியாகுமரி

 

பெருமாள் : ஆதிகேசவன் 

தாயார் : மரகதவல்லி நாச்சியார் 

சயன திருக்கோலம் 

 

இப்பெருமாளின் திருமேனி கல்லால் வடிக்காத திருமேனி. கேரளாவின் வேணாட்டை ஆண்ட மன்னர் கி.பி.776 – ம் ஆண்டு 16,008 சாளக்கிராம மூா்த்தங்களால் கடு சர்க்கரை யோகம் என்னும் (41 மூலிகைகளின் கலவை) கலவையினால் இணைத்து உருவாக்கப்பட்டு மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஆதிசேஷ சர்ப்பத்தின் மீது புஜங்க சயனத்தில், யோக முத்திரையில் 22 அடி நீளத்தில் பள்ளிகொண்டிருக்கிறார் ஆதிகேசவப் பெருமாள்.

பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது இக்கோயில்

 

இந்தத் திருத்தலத்தை வட்டமாகச் சுற்றி பரளியாறும், கோதையாறும் செல்வதால் திருவட்டாறு என்று இந்தத் தலத்திற்கு பெயர்

இந்த கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழைமையானது 

பெருமாள் 22 அடி நீளம் கொண்டு காட்சி அளிப்பதால் ஒரு வாசல் வழியாக முழுமையாக தரிசிக்க முடியாது என்பதால் திருத்தலை, திருக்கரம், திருப்பாதம் என மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 

ஒரு யுகம் முடியும் போது திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் புரண்டு படுப்பார் என்று கூறப்படுகிறது!

 

கீதா ராஜா சென்னை