tamilnadu epaper

தினம் ஒரு திவ்ய தேசம்

தினம் ஒரு திவ்ய தேசம்

ஸ்ரீவைகுண்டம்*, தூத்துக்குடி

 

மூலவர்:

வைகுந்தநாதன் (நின்ற திருக்கோலம்)

உற்சவர்:

கள்ளபிரான், ஸ்ரீசோரநாதர்

தாயார்:

வைகுண்டவல்லி, பூதேவி

உற்சவர் தாயார்:

ஸ்ரீசோரநாயகி

 

நவதிருப்பதிகளில் முதலாவதாகவும், நவகிரக ஸ்தலங்களில் சூரிய ஸ்தலமாகவும் இந்த ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில் அமைந்துள்ளது. 

 

தை முதல் நாள் அன்று கள்ளபிரானை 108 போர்வைகளால் போர்த்தி, கொடிமரத்தை சுற்றி வந்த பின் பூஜை செய்து, ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தை கலைப்பர்.

 

இந்த வைகுந்தநாதனை வருஷத்துக்கு இரண்டு முறை சூரியன் வழிபாடு செய்கிறான். சித்திரை மாதம் ஆறாம் தேதி, ஐப்பசி மாதம் ஆறாம் தேதி இரண்டு நாட்களும் இளஞ்சூரியனது கிரணங்கள் கோபுர வாயில், மண்டபம் எல்லாம் கடந்து வந்து பெருமாள் மேனியைப் பொன்னிற மாக்குகின்றன. இந்த அதிசயம் இந்த தலத்தில் மட்டுமே நடக்கிறது.

 

கீதா ராஜா சென்னை