tamilnadu epaper

தினம் ஒரு திவ்ய தேசம்

தினம் ஒரு திவ்ய தேசம்

திருவரகுணமங்கை*(நத்தம்), தூத்துக்குடி

 

மூலவர் : விஜயாசன பெருமாள்   

அமர்ந்த கோலம்

 உற்சவர் : எம்இடர்கடிவான் 

தாயார் : வரகுணமங்கை, வரகுணவல்லி 

 

நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படும் நவ திருப்பதிகளில் இரண்டாவதாக சந்திரனுக்குரிய தலமாக விளங்கும் கோவில் "திருவரகுணமங்கை". தற்போது இந்த ஊர் நத்தம் என்று அழைக்கப்படுகிறது.

 

வேதவித்து என்னும் பிராமணருக்கு பகவான் காட்சி தந்த தலம். பிராமணரின் பிரார்‌த்தனைப்படி விஜயாசனர் என்ற திருநாமத்தோடு பகவான் காட்சி ‌‌கொடுத்த தலம். அக்னி ரோமச முனிவர், சத்தியவான் ஆகியோர்க்கு காட்சிதந்த தலம்.

 

கருவறையில் தாயார்கள் இருவரும் பெருமாளோடு சேர்த்தியாக இருப்பதால், தாயார்களுக்கு தனி சன்னதி இல்லை.

 

இங்குள்ள யோக நரசிம்மருக்கு பிரதோஷ வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

 

கீதா ராஜா, சென்னை