திருபுளியங்குடி*, தூத்துக்குடி
மூலவர்: பூமிபாலகர்
உற்சவர்: காய்சினவேந்தன்
தாயார்: மலர்மகள் நாச்சியார், நிலமகள் நாச்சியார், புளியங்குடி வள்ளி
நவதிருப்பதிகளில் ஒன்றான இத்தலத்தில் பெருமாள் ஆதிசேஷன் மீது 12 அடியில் பள்ளி கொண்டுள்ளார். சயனப் பெருமாளின் திருப்பாதத்தை, மூலஸ்தானத்தை சுற்றி வரும் போது ஜன்னல் வழியே தரிசிக்கலாம். பெருமாள் நாபியில் இருந்து ஒரு தாமரைக்கொடி சுவரில் பிரம்மன் வீற்றிருக்கும் தாமரையுடன் சேருகின்றது. இவர் மேனிக்கு எண்ணெய் காப்பு செய்ய 250 லிட்டர் எண்ணெய் உபயோகிக்கப்படுகிறது. இலக்குமியும் பூமாதேவியும் பெரிய உருவங்களாக பெருமாளின் திருப்பாதத்தில் அமர்ந்துள்ளனர்.
இந்திரனுக்கு திருமால் சாப விமோசனம் அளித்த தலம்.
கீதா ராஜா சென்னை