இன்று தை மாதம் ஒன்பதாம் நாள் புதன்கிழமை *இன்றைய திருவாசகம்* மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி ?
☘️?☘️?☘️?☘️?☘️?
*அச்சப்பத்து*
*பாடல் 02*
வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பி ரானாந்
திருவுரு அன்றி மற்றோர் தேவர்எத் தேவர் என்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
☘️?☘️?☘️?☘️?☘️?
*பொழிப்புரை*
பறறற்றான் பற்றினைப் பற்றும் அடியார்க்கு உலகப் பற்று அறும் ஆதலின், 'வேட்கை வந்தால் வெருவரேன்' என்றார். அவர்களுக்கு வினையாகிய கடலைக் கடத்தற்கு இறைவனாகிய தோணி உதவுமாதலின், 'வினைக்கடல் கொளினும் அஞ்சேன்' என்றார். அவ்வாறு உதவுகின்றவனாகிய சிவபெருமானைத் தவிர மற்றொரு தேவரைக் கண்டால் வெறுப்பு அடையாதவரைக் கண்டால் அஞ்ச வேண்டும் என்பார், 'தம்பிரானாந் திருவுரு அன்றி மற்றோர் தேவர் எத்தேவர் என்ன அருவரா தவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறு' என்றார்.
இதனால், சிவபெருமானையன்றி மற்றத் தேவரை வணங்குவதால் பிறவித்துன்பம் நீங்காது என்பது கூறப்பட்டது.
?☘️?☘️?☘️?☘️?☘️
ஈசனடிமை சிவசுரேஷ் மதுரை