tamilnadu epaper

திருப்பத்தூர் பாபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

திருப்பத்தூர் பாபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

  பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஆண்டுவிழாவிற்கு பள்ளித்தாளாளர் பாபாஅமீர்பாதுஷா தலைமை வகித்தார். சிவம் சிலம்ப பயிற்சிக்கழகத் தலைவர் எம்,பரமசிவம் முன்னிலை வகித்தார். விழாவின் சிறப்பு அழைப்பாளராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முன்னாள் Vice Chairman Past District Governor எஸ்.எஸ்.பாரிபரமேஸ்வரன் கலந்து கொண்டு மாணாக்கர்களின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கும் பெற்றோர்களின் பங்கும் சம அளவில் இருக்க வேண்டும் என எடுத்துக் கூறி பிற மொழி கற்றாலும் தமிழ்மொழியின் அவசியத்தை எடுத்துரைத்தார். 

தொடர்ந்து கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணாக்கர்களுக்குப் புத்தகம், பதக்கம், சான்றிதழ்கள் வழங்கபட்டது. பேராசிரியர் சுப்பிரமணியன் முன்னாள் ஆசிரியர் சர்க்கரைமுகமது, தொழிலதிபர் ராஜகோபால், வாசகர் வட்டத் தலைவர் ஜெயச்சந்திரன், அரிமா சங்கத் தலைவர் ஏ.அபுதாகிர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.அதனை தொடர்ந்து சிவகங்கை அரசு தலைமை ஹாஜி K. M. பாருக் ஆலிம்ஷா சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் பள்ளி முதலவர் எஸ்.வரதராஜன் வரவேற்று மற்றும் ஆண்டு அறிக்கை வாசித்தார்.விழாவி ற்கான ஏற்பாட்டினை பள்ளி ஒருங்கிணை ப்பாளர் மெகர்பானு உடற்கல்வி ஆசிரியர் சிலம்பரசன் ஆசிரியர் அழகு மீனா பள்ளி துணை முதல்வர் கனகா ஆகியோர் செய்து இருந்தனர். ஆசிரியர் சந்தான லட்சுமி நன்றி உரையாற்றினர்.