முப்பாட்டன் களம்" />

tamilnadu epaper

தீராக்களம் நூல் ஆய்வரங்கம்

தீராக்களம் நூல் ஆய்வரங்கம்

திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத்தில் மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில், கவிஞர் பாட்டாளியின் " தீராக்களம்" நூல் ஆய்வரங்கம் நேற்று முன்தினம் (5.4.25) நடைபெற்றது.


    முப்பாட்டன் களம் - திருமதி. இரா.ஜெயலட்சுமி

பாட்டன் களம் - திரு. இந்திரஜித் 

அப்பன் களம் - திருமதி. தனலட்சுமி பாஸ்கரன் 

பேரன் களம் - திரு. ஜவஹர் ஆறுமுகம் என 4 பிரிவுகளாக ஆய்வுரை நிகழ்த்தினர்.


     நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க சிறப்புத்தலைவர் அரிமா சௌமா ராஜரத்தினம் தலைமை ஏற்க , யோகா விஜயகுமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.   

    கவிஞர் ஆங்கரை பைரவி நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.


    திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க துணைத்தலைவர்கள் திரு.மா.சுப்ராமன், திரு. சூர்யா வெ.சுப்பிரமணியன் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் திரு.முகம்மது ஷபி ஆகியோர் முன்னிலை வகிக்க, திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்க அமைச்சர் பெ.உதயகுமார், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க பொருளாளர் முனைவர் திருமதி சங்கரி சந்தானம் இருவரும் வாழ்த்துரை வழங்கினர்‌.


    ஏற்புரை வழங்கிய கவிஞர் பாட்டாளி , கேரளாவில் நடைபெற்ற "மாப்ளா கிளர்ச்சிக்கு" முன்னதாக, தமிழகத்தில் 1802 ம் ஆண்டில் நடைபெற்ற, "உழவர் புரட்சி "பற்றி எங்குமே இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்றும் அதை இந்நூலில் விரிவாக பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.


     மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் திரு.நந்தவனம் சந்திரசேகரன் நன்றி கூற ஆய்வரங்கம் இனிதே நிறைவடைந்தது.


-ஸ்ரீகாந்த் திருச்சி