எட்டயபுரம், ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் மண்டபத்தில் வைத்து கிருஷ்கவி சித்தா கிளினிக் சார்பில் நடைபெற்ற இலவச சித்த மருத்துவ முகாமை மருத்துவர். மு.கிருஷ்ணமூர்த்தி BSMS., தொடங்கி வைத்தார்.
முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக
முனைவர்.சம்பத்குமார் ஆறுமுகநயினார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
முகாமில் கலந்து கொண்ட பயனாளிகள் அனைவருக்கும்
உடல் எடை, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு போன்றவை பரிசோதிக்கப்பட்டு
இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன.
இலவச முகாமை சித்தா கிளினிக் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.