ஏழையின் சிரிப்பில் மட்டுமல்ல...
மழலையின் சிரிப்பிலும் இறைவனைக் காணலாம்!
அவற்றின் கள்ளமில்லா சிரிப்பில்...
பொய் கலக்காத பேச்சில்...
பாகுபாடு பார்க்காத தன்மையில்...
கேட்டதும் கொடுக்கின்ற வள்ளலில்...
மௌனமாக பேசும் மொழியில்...
தேவைக்கு மட்டும் ஆசைப்படுவதில்...
தெய்வமே குழந்தைகளாய் அவதரித்ததோ...
என்று நினைக்கத் தோன்றுகிறது!
ஏனெனில்...
தெய்வம் குழந்தையும் குணத்தால் ஒன்று!
நெல்லை கவி.மோகனசுந்தரம்
ஊரப்பாக்கம்