tamilnadu epaper

தேசூர் ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம்

தேசூர் ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம்


வந்தவாசி, ஏப் 10:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் எதிராஜவல்லி தாயார் சமேத ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலின் பிரம்மோற்சவ விழாவின் ஏழாம் நாள் தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தேசூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணி வேந்தன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் தேர் திருவிழாவில் பங்கேற்றனர். மேலும் தேர்த் திருவிழாவின் போது பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.