tamilnadu epaper

தை வெள்ளிக்கிழமை

தை வெள்ளிக்கிழமை

 

 

தை வெள்ளியின் சிறப்பு :

 

✨உத்திராண்ய?️ காலத்தின் ஆரம்ப மாதமான தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினங்களில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

 

✨தை மாத வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உரிய நன்னாள். இந்த நாளில், அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் நடைபெறும். தை மாத வெள்ளிக்கிழமையில், அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை ?வணங்கினால், நம்மையும் நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வாள்.?

 

✨ஒவ்வொரு மாதமும் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் அம்பிகைக்கு உரிய அற்புதமான நாட்கள் ஆகும். அதனால்தான், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், மகாசக்தி குடிகொண்டிருக்கும் தலங்களில் பெண்கள் முதலான பக்தர்கள் பலரும் ?வணங்கி வழிபடுகிறார்கள்.

 

✨அந்த வகையில் தை மாத வெள்ளிக்கிழமைகள், அம்பாளுக்கு ரொம்பவே விசேஷமானவை ஆகும். தை மாத வெள்ளிக்கிழமையான, இன்று அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்தால் நன்மையாவும் கிடைக்கும். முடிந்தால், செந்நிற மலர்கள் சூட்டி வழிபடலாம். செவ்வரளி மாலை சாற்றி ?வணங்குவது சிறப்பு.

 

✨வரம் கொடுக்கும் லட்சுமியை 'வரலட்சுமி" என்று அழைத்து, விரதமிருந்து வழிபட ஏற்ற நாள் தை வெள்ளிக்கிழமை ஆகும்.

 

✨லட்சுமியை வணங்குவதால் நமது லட்சியக் கனவுகள் நனவாகும். பொருளாதாரத்தில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும்.

 

தை வெள்ளி விரதமுறை :

 

✨தை மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து, கோலமிட்டு மாவிலைத் தோரணம் கட்டி, ?விளக்கேற்றி லட்சுமிதேவிக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும்.

 

✨வீட்டுவாசலில் தாமரைக் கோலம் இட்டு, 'திருமகளே வருக! செல்வ வளம் தருக!" என்று கோலமாவினால் கூட எழுதலாம்.

 

✨வீட்டு பூஜையறையில்? விநாயகர் மற்றும் வரலட்சுமியின் படத்தை பலகையின் மேல் வைத்து, அதன் அருகில் பஞ்சமுக விளக்கேற்றி வழிபட வேண்டும்.

 

✨அருகில் நெல் பரப்பி, அதன் மேல் ஒருதட்டில் அரிசியைப் பரப்பி வைக்கவேண்டும். பூச்சூட்டிய குடம், மாவிலை, தேங்காய் போன்றவற்றை சேர்த்து, லட்சுமி படத்தின் முன்னால் வைக்கவேண்டும்.

 

✨தேங்காய்?, பழம், வெற்றிலை பாக்கு, இனிப்பு பொருள் ஆகிய நைவேத்தியத்தோடு, லட்சுமி கவசம் மற்றும் வருகைப் பதிகம் பாடி வழிபாடு செய்தால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். பலரும் போற்றும் வாழ்க்கை அமையும்.

 

✨லட்சுமி? கடைக்கண் பார்க்க தை மாத வெள்ளிக்கிழமைகளில் சமயமாலை படித்து அதிகாலை நேரம் ?வழிபடுவது நல்லது.

 

வெள்ளிக்கிழமை ராகுகால வழிபாடு: 

 

✨வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில், ?அம்மன் கோவிலுக்கு சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்க்கை சந்நிதியில் ?விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களும், கண் திருஷ்டியும் நீங்கும்.

 

✨எனவே, தை வெள்ளிக்கிழமை நாளில், அம்பாளுக்கு செவ்வரளி மாலை சாற்றி வேண்டிக் கொள்ளுங்கள். துர்க்கை சந்நிதியில் நெய் தீபம்? அல்லது எள் தீபமேற்றி? வழிபடுங்கள். வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். வீட்டில் மங்கள காரியங்கள் விரைவில் நடக்கும்.

 

✨தை வெள்ளியில் அம்மனை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும். மேலும், ?சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெண்பொங்கல், கேசரி என ஒவ்வொரு வாரமும் ஏதேனும் பிரசாதத்தை வழங்கி அம்மனை வழிபட்டு வந்தால் தனம், தானியம் பெருகி மனநிறைவான வாழ்க்கை அமையும்.

 

?சமயமாலை :?

 

'அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும்

 

துன்பமெல்லாம்

 

உந்தனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும்

 

உண்மையன்றோ!

 

இன்றோடு துயர்விலக இனிய தனலட்சுமியே!

 

மன்றாடிக் கேட்கின்றேன் வருவாய் இதுசமயம்"

 

✨என்று சமயமாலை லட்சுமியின் முன்னால் பாடுங்கள். உங்கள் கலக்கங்கள் அகலும். கவலைகள் தீரும். பக்கபலமாக பல்வகைச் செல்வங்களையும் லட்சுமிதேவி வழங்குவாள். அத்துடன் மனதில் தெளிவோடு தை வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையைப் பூஜித்தால் இன்பங்கள் யாவும் இல்லம் வந்துசேரும்.

 

?தை வெள்ளி திருஷ்டி சுற்றுதல் :?

 

✨தை மாதத்தில், வெள்ளிக்கிழமைகளில் மறக்காமல் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் திருஷ்டி சுற்றிப் போட வேண்டும்.

 

✨வெள்ளிக்கிழமையில், மாலையில் ?விளக்கேற்றியதும், சூரியன் மறைந்த பிறகு, குடும்பத்தினர் அனைவரையும் வீட்டின் நடுவே அமரவைத்து திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். திருஷ்டி கழிக்கும்போது உறுப்பினர்கள் அனைவரும் கிழக்கு பார்த்து அல்லது வீட்டின் வாசலைப் பார்த்து அமர வேண்டும்.

 

✨பூசணிக்காய், ?எலுமிச்சை மற்றும் தேங்காய் இவற்றை கொண்டும் சுற்றிப் போடுவது மிக மிக நல்லது மற்றும் வலிமைமிக்கது என்கிறார்கள் நம் முன்னோர்கள்.

 

 

Thanks and regards 

A s Govinda rajan 

17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai