அம்மா வாங்கித் தந்தாங்க
அழகு வண்ண நடைவண்டி
தம்பிப் பாப்பா நானுமே
நடந்து பழகிய நடைவண்டி!
முன்னே ஒருசக்கரம்
பின்னே ரெண்டு சக்கரம்
அண்ணன் நடுவில் உட்கார
அழகுத் தம்பி தள்ளுவான்!
நேராய் ஓட்டத் தெரியாது
நிமிர்ந்து பார்க்க மாட்டானே
வாராய் நாமும் பின்னாலே
பாது காப்பாய் ஓடலாம்!
-அருப்புக்கோட்டை செல்வம்
முகவரி;
அருப்புக்கோட்டை செல்வம்
5, சித. பெருமாள்தெரு
வேலாயுதபுரம்,
அருப்புக்கோட்டை. 626101