முன்பின் பார்த்ததில்லை
முதல் பார்வையே
பல நாள் பழகிய
பாசம் கலந்த நட்பு பார்வை
பழகிய நேரம் சிலவே எனினும்
பழகிய விதமும்
காட்டிய பரிவும்
நட்பின் எல்லை
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
வளர்ந்து வரும்
தேய் பிரை இல்லாத
முழு நிலவு எம் நட்பு
என நான் நினைக்க
கடவுள் கணக்கோ
நாம் போடும் கணக்கல்ல
காலன் குறியும்
கரிகாலன் குறியும்
தப்பாது போலும்
பயணம் முடிய
இறங்க வேண்டிய ஊர் வர
நட்பு சிரிப்புடன்
பயணமும் முடிந்திட
நட்புக்கும் முற்றுப்புள்ளி
-ஓம் குமார் P N
2/38, கொட்டுக்கண்ணாரத்தெரு,
தெற்கு வாசல், மதுரை 625001